தற்போது வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் அதிரடி வீரர் கீரன் பொல்லார்தான் போட்டியின் 19 ஆவது ஓவரில் நான்கு சிக்ஸர்கள் அடித்தது தனது அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த கீரன் பொல்லார்ட் ஐபிஎல் தொடரில் மட்டும் ஓய்வு பெற்றுவிட்டார். மற்றபடி உலகெங்கும் நடக்கும் டி20 லீக்குகளில் கலந்துகொண்டு பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தங்களது சொந்த மண்ணில் நடக்கும் கரீபியன் டி20 லீக்கில் அவரது பழைய அதிரடியில் அனல் பறக்கிறது.
மிடில் ஆர்டரில் ரோஸ்டன் சேஸ்
இந்த போட்டியில் டாஸ் வென்ற கீரன் பொல்லார்ட் அணியான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு பாப் டு பிளிசிஸ் 26 பந்தில் 34 ரன்கள், ஜான்சன் சார்லஸ் 14 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதைத்தொடர்ந்து மிடில் வரிசையில் ரோஸ்டன் சேஸ் சிறப்பாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 40 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 56 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து விளையாடிய இலங்கையின் ராஜபக்சே 29 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. சுனில் நரைன் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
கீரன் பொல்லார்ட் அதிரடி
இந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் 16, சுனில் நரைன் 14 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார்கள். மூன்றாவது வரிசையில் பாரிஸ் 33 பந்தில் 57 ரன்கள் எடுத்தார். நிக்கோலஸ் பூரன் 12 பந்தில் 17 ரன்கள் உடன் வெளியேறினார்.
இந்த நிலையில் வெற்றிக்கான ரன்கள் அழுத்தம் அதிகரித்தது. ஒரு முனையில் கீரன் பொல்லார்ட் அனுபவத்தைக் கொண்டு விளையாடி ஆட்டத்தை கடைசிக்கு இழுத்துச் சென்றார். கடைசி இரண்டு ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் சுதாரித்த பொல்லார்ட் மேத்யூ போர்ட் வீசிய 19 வது ஓவரில் இரண்டு பந்துகளை தவறவிட்டு நான்கு சிக்ஸர்களை பறக்க விட்டு போட்டியை அந்த ஓவரிலேயே எடுத்துக் கொண்டார்.
இதையும் படிங்க : ருதுராஜுக்கு ஒன்றரை வருடங்கள் நேரம் சரி கிடையாது.. ஆனா கில்லையும் கழட்டி விடுவாங்க – ஆகாஷ் சோப்ரா பேச்சு
இதைத்தொடர்ந்து வெற்றிக்கு கடைசி ஓவரில் நான்கு ரன்கள் தேவைப்பட இருபதாவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டர் அடித்து டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. கீரன் பொல்லார்ட் 19 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள் உடன் 52 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
KIERON POLLARD MADNESS IN CPL…..!!!! 🤯
— Johns. (@CricCrazyJohns) September 11, 2024
TKR needed 27 runs from 11 balls then Pollard smashed 6,0,6,6,6 to register a great comeback win.
Captain Pollard scored 52* runs from 19 balls including 7 sixes in the chase. 🔥 pic.twitter.com/yHPwUSrcGS