ருதுராஜுக்கு ஒன்றரை வருடங்கள் நேரம் சரி கிடையாது.. ஆனா கில்லையும் கழட்டி விடுவாங்க – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
60
Gill

தற்போது இந்திய அணியில் சுப்மன் கில்லை நடத்துவதற்காக ருதுராஜை ஒட்டுமொத்தமாக ஓரம் கட்டி இருக்கிறார்கள். இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பல விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

இறுதியாக இலங்கை அணிக்கு எதிரான வெள்ளைக்பந்து தொடர்களில் இரண்டு அணிகளிலும் ருதுராஜுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதே சமயத்தில் அந்த இரண்டு அணிகளிலும் தேர்வு செய்யப்பட்ட சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பொறுப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் டெஸ்ட் வடிவத்திலும் அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ருதுராஜின் ரசிகர் மன்றம்

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “தற்போது ருதுராஜுக்கு ஒரு ரசிகர் மன்றம் இருக்கிறது. அவரைப் பிடிக்கும் ஒரு கூட்டம் உருவாகி இருக்கிறது. இது மிகவும் நியாயமான ஒன்று. ருது பேட்டிங் செய்யும் பொழுது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. அவருடைய நேரான ஷாட், கட் ஷாட் மற்றும் புல் ஷாட் ஆகியவை அபாரமானவையாக இருக்கிறது. அவர் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் அபாரமாக இருக்கிறார்”

“இப்படி இருந்தும் கூட அவருக்கு என்ன நடக்கிறது என்றால் அவர் ஒரு ஒன்றரை வருடங்கள் தவறான காலத்தில் இருக்கிறார். கில் இந்தப் பந்தயத்தில் வெகு தூரம் முன்னேறி சென்று விட்டார். பயிற்சியாளர்கள் கேப்டன் என எல்லோரும் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக கில்லை முடிவு செய்து விட்டார்கள்”

- Advertisement -

கில்லும் கழட்டி விடப்படுவார்

மேலும் இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா “இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிக இடங்கள் இல்லை. அங்கு துவக்க இடத்தில் ஜெய் ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா கொஞ்ச காலம் விளையாட போகிறார்கள். மேற்கொண்டு ஆறாவது இடம் வரைக்கும் தேவையான பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : இங்கி கேப்டனை இல்லை.. தனது பெஸ்ட் கேப்டன்களாக தோனியை தேர்வு செய்து.. ஆச்சரியத்தை ஏற்படுத்திய மொயின் அலி

ஒருநாள் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் இந்திய அணி அதிக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாது. அதே சமயத்தில் இந்த நேரத்தில் ருதுராஜை டி20 கிரிக்கெட்டுக்கு பரிசீலிப்பார்கள் என நான் நினைக்கவில்லை. தற்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டார்கள். மேலும் டி20 கிரிக்கெட் டெம்ப்ளேட் வித்தியாசமாக உருவாக்கப்படும். அங்கு அதிரடியான வீரர்கள் கொண்டு வரப்படுவார்கள். எனவே ருதுராஜிக்கு இடம் இருக்காது. மேலும் கில்லும் இந்திய டி20 கிரிக்கெட்டில் சீக்கிரத்தில் கழட்டி விடப்படுவார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -