கோலிய சப்போர்ட் பண்ணி பேச வரல.. ஆனா இலங்கையில் உண்மையில் நடந்தது இதுதான் – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
2704

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த தொடரில் இளம் பேட்ஸ்மேன்கள் தடுமாறினாலும் சீனியர் வீரரான விராட் கோலியும் தடுமாற்றமாகவே விளையாடினார்.

இந்திய அணியின் தோல்விக்கு விராட் கோலியின் ஆட்டமும் ஒரு வகையில் காரணமாக அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இது குறித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இலங்கை ஆடுகளம் குறித்தும் விராட் கோலி குறித்தும் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி அதற்குப் பிறகு ரோஹித் சர்மா தலைமையில் எதிர்கொண்ட ஒரு நாள் தொடரில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினாலும் அணியில் மற்றொரு சீனியர் வீரரான விராட் கோலி மூன்று போட்டிகளிலும் தடுமாறவே செய்தார். முதல் போட்டியில் 24 ரன்களும் இரண்டாவது போட்டியில் 14 ரன்களும், மூன்றாவது போட்டியில் 20 ரன்கள் குவித்தார்.

ஒரு முறை கூட 30 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக், நான் விராட் கோலிக்கு சப்போர்ட்டாக பேசவில்லை, ஆனால் அத்தகைய ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக பேட்டிங் செய்வது மிகவும் கடினம்தான் என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து தினேஷ் கார்த்திக் விரிவாக கூறும்போது “இந்த தொடரை பொருத்தவரை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா என யாராக இருந்தாலும் சரி, சற்று பழையதாக இருக்கும் பந்தில் 8லிருந்து 30 ஓவர்களுக்குள் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். அதனால் இதில் கவலைப்படுவதற்கு எதுவும் கிடையாது. நிறைய ஆடுகளங்கள் இது போல் செயல்படுவதில்லை.

ஆனால் சுழற் பந்து வீச்சுக்கு இந்த ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகவும் கடினமானதுதான். நான் விராட் கோலிக்கு ஆதரவாக பேசவில்லை ஆனால் இங்கு சுழற்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடுவது கடினம்தான்” என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். தினேஷ் கார்த்திக் கூறிய கருத்தை போலவே மூன்றாவது போட்டியில் விராட் கோலி அவுட் ஆன விதத்தை பார்த்தால் ஒரு விஷயம் நன்றாகவே புரியும்.

இதையும் படிங்க:கிரவுண்டுக்கு வரணும்ல சும்மாவா.. சூரியகுமார கேப்டனா ஆக்கினதுக்கு காரணம் இதுதான் – முன்னாள் இந்திய பீல்டிங் கோச் பேட்டி

மூன்றாவது போட்டியில் விராட் கோலி அவுட் ஆன விதத்தில் பால் பிட்ச் ஆன லைனில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டு ஸ்டம்ப் லைனில் இருந்த விராட் கோலியின் பேடுகளை தாக்கியது. அப்போதே ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று பேட்ஸ்மேன்களுக்கு வந்தது தெளிவாக தெரிந்திருக்கும். எனவே தினேஷ் கார்த்திக் கூறிய இந்த கருத்திற்கு ஒரு சில ரசிகர்கள் ஆதரவாகவும், ஒரு சில ரசிகர்கள் அதற்கு எதிராகவும் பேசி வருகின்றனர்.

- Advertisement -