இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டி20 போட்டியில் ஹர்ஷித்ராணா மாற்று வீரராக வந்த விவகாரத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும், அதே சமயத்தில் இதற்கு ஒரு இந்திய முன்னாள் வீரர் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் கெவின் பீட்டர்சன் வலியுறுத்தி இருக்கிறார்.
இந்த குறிப்பிட்ட போட்டியில் ஜேமி ஓவர்டன் பந்துவீச்சில் சிவம் துபே ஹெல்மெட்டில் பந்து தாக்கியது. இதன் காரணமாக மூளை அதிர்ச்சி ஏற்பட்ட அவர் ஆட்டத்தின் இரண்டாம் பகுதியில் இருந்து வெளியேறினார். இதனால் அவருடைய இடத்திற்கு பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா கொண்டுவரப்பட்டார். ஆனால் ரமன்தீப் சிங்தான் அதற்கு சரியானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?
இது சம்பந்தமாக ஐசிசி விதி மிகவும் தெளிவாகவே இருக்கிறது. யார் காயமடைகிறார்களோ அவரைப்போலான இன்னொரு வீரரே களம் இறக்கப்பட வேண்டும் என்று விதி கூறுகிறது. ஒரு பேட்ஸ்மேன் காயம் பட்டால் ஒரு பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் ஆல் ரவுண்டர் என சரியான வீரர்களை மாற்று வீரர்களாக கொண்டு வர வேண்டும்.
இந்த நேரத்தில் அணிகள் மாற்று வீரர்கள் யாரை வேண்டுமானாலும் முன் நிறுத்தலாம். ஆனால் மேட்ச் ரெப்ரி தான் யார் யாருக்கு சரியான வீரராக இருப்பார் என முடிவு செய்து களத்திற்கு அனுப்ப வேண்டும். இதில் முழு முடிவெடுக்கும் அதிகாரமும் மேட்ச் ரெப்ரிக்கு மட்டுமே இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் ஒரு தவறு நடக்கும் என்றால் அது மேட்ச் ரெப்ரி எடுக்கும் முடிவால் தான் நடக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய முன்னாள் வீரர் செய்த தவறு
இந்திய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் இந்த போட்டிக்கு மேட்ச் ரெப்ரியாக இருந்தார். இந்திய அணி நிர்வாகம் சிவம் துபே இடத்திற்கு ஹர்ஷித் ராணாவை கொண்டு வந்த பொழுது, ஜவகல் ஸ்ரீநாத் அதை எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டார். மேலும் அதிருப்தி அடைந்த இங்கிலாந்து அணியின் கோரிக்கையையும் அவர் நிராகரித்தார்.
இதையும் படிங்க : பிசிசிஐ ஹர்திக் பாண்டியா மனுசன் இல்லையா.. ஏன் இப்படி நடத்துறிங்க? – முகமது கைஃப் கேள்வி
இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறும் பொழுது “இங்கே எல்லா இடங்களிலும் ஹர்ஷித் ராணா மாற்று வீரராக வந்து விளையாடி இது தான் பேச்சாக இருந்து வருகிறது. என்னுடைய பார்வை என்னவென்றால், இப்படிப்பட்ட ஒரு மாற்றுவீரரை கொண்டு வருவதை யாரும் விரும்பவில்லை. எனவே மேட்ச் ரெபரி தன் கைகளை உயர்த்தி இந்த தவறுக்கு தான் தான் பொறுப்பு மற்றும் காரணம் என ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று இரு அணிகளுக்கும் இடையே மற்றொரு பெரிய போட்டி காத்திருக்கிறது. நாம் அதற்குள் செல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






