இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியிருக்கிறார்.
மேலும் அவருடைய பிளேயிங் லெவனில் ரிஷப் பண்ட் ஏழாவது இடத்தில் தான் விளையாட வேண்டும் என்று கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். மேலும் ஆறாவது இடத்திற்கு ஒரு பேட்ஸ்மேனை இந்திய அணி கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் வாய்ப்பு
தற்போது இந்திய அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் குல்தீப் யாதவ் உடன் செல்வதாக இருந்தால், பேட்டிங் வரிசையை ஏழு வரையில் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். மேலும் இப்படி செல்வதாக இருந்தால் சுழல் மற்றும் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் தேவைப்பட மாட்டார்கள். நேரடியாக ஒரு முழுமையான பேட்ஸ்மேனை கொண்டு போகலாம்.
இல்லையென்றால் குல்தீப் யாதவ் இடத்திற்கு ரவீந்திர ஜடேஜா அல்லது வாஷிங்டன் சுந்தர் யாரையாவது கொண்டு வந்து பேட்டிங் வரிசையை 8 வரையில் நீட்டிக்கலாம். இதில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரையும் கொண்டு வரலாம். நிதீஷ் குமார் ரெட்டி அல்லது சர்துல் தாக்கூர் இருவரில் ஒருவர் விளையாடலாம். இப்படி இரண்டு விதமான பிளேயிங் லெவன் தற்பொழுது இந்திய அணியின் கையில் இருக்கிறது.
ரிஷப் பண்ட் ஏழாவது இடத்தில் இருக்கணும்
இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறும் பொழுது ” தான் எங்கு விளையாட வேண்டும் என்பதை கேப்டன் கில் முடிவு செய்து கொள்ளலாம். அவருக்கு வசதியான இடத்தில் அவர் விளையாடலாம். அவர் மூன்றாவது இடத்திலும் வரலாம் இல்லை நான்காவது இடத்திலும் வரலாம். மேலும் துவக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல்.ராகுல் இருப்பார்கள். மேலும் இந்த மூன்று பேருடன் சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் இருவரும் விளையாடுவது உறுதி. இந்த ஐந்து பேரும் நிச்சயம் இருப்பார்கள்”
இதையும் படிங்க : ரிஷப் பண்ட் கருண் நாயருக்கு நடுவே சுவாரசிய போட்டி.. கம்பீர் புத்திசாலியாக இருப்பாரா? – என்ன நடக்கிறது
“இதைத் தொடர்ந்து ஆறாவது இடத்தில் ஒரு பேட்ஸ்மேனை இந்திய அணி நிர்வாகம் கண்டுபிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ரிஷப் பண்ட் ஏழாவது இடத்தில் களம் இறங்குவதுதான் சரியாக இருக்கும். மேலும் ஏழு பேட்ஸ்மேன்கள் போக மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் உடன் ஒரு சுழல் பந்துவீச்சாளர் இடம் பெறுவார். இந்த வகையில்தான் பிளேயிங் லெவன் அமைய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






