இந்திய கிரிக்கெட்

அபிஷேக் ஷர்மாவ பாத்து நான் ஏன் ஆச்சரியப்படனும்?.. இதுக்கு அவர் மட்டும்தான் இப்ப – கெவின் பீட்டர்சன் பேச்சு

தற்போது டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் ஷர்மா குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எந்த இந்திய பேட்ஸ்மேன்களையும் விட அபிஷேக் ஷர்மா மிகவும் சிறப்பாகவும் அதே சமயத்தில் கடினமில்லாமலும் விளையாடினார்.

மாற்றிய இங்கிலாந்து தொடர்

இந்த ஆண்டு இந்தியாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடர் அபிஷேக் ஷர்மா கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கைக் கொண்டிருக்கிறது. அந்த தொடரின் கடைசி போட்டியில் அபிஷேக் ஷர்மா அபாரமான முறையில் சதம் அடித்து அசத்தியிருந்தார்.

இந்த சதம்தான் ஜெய்ஸ்வாலை இந்திய டி20 அணிக்கு உள்ளே வரவிடாமல் செய்தது. அவர் அச்சமில்லாமல் ஆடும் முறையின் காரணமாகவும் மேலும் அவர் இடதுகை பகுதிநேர சுழல் பந்துவீச்சாளராகவும் இருக்க முடியும் என்பதால், ஆசியக் கோப்பை தொடருக்கு ஜெய்ஸ்வாலை நிராகரித்து இவரை தேர்ந்தெடுத்தார்கள்.

- Advertisement -

ஏன் ஆச்சரியப்பட வேண்டும்?

இந்த நிலையில் தற்போது ஐசிஐசிஐ டி20 பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் அபிஷேக் சர்மா முதல் இடத்தில் இருந்து வருகிறார். அவரது இந்த வளர்ச்சி மற்றும் விளையாட்டு குறித்து தனக்கு எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் பாராட்டி இருக்கிறார்.

இதையும் படிங்க: 417 ரன் இருந்தும்.. தெ.ஆ அணியிடம் தோற்ற ரிஷப் பண்டின் இந்திய அணி.. கம்பீருக்கு ஆரம்பித்த சிக்கல்

இது குறித்து கெவின் பீட்டர்சன் பேசும் பொழுது ” தற்போது அபிஷேக் ஷர்மா விளையாடிக் கொண்டிருக்கும் முறையில் எனக்கு எந்த விதமான ஆச்சரியமும் கிடையாது. தற்போது அவர் டி20 கிரிக்கெட்டில் மிகவும் முழுமையான சரியான துவக்க ஆட்டக்காரராக இருக்கிறார். அவருக்கு பயம் என்பதே கிடையாது, தைரியமானவர் மேலும் திறமையானவர்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by