கில்லுக்கு இதை மட்டும் செய்யாதீங்க.. 2 வருஷம் கழிச்சு நடக்கற மேஜிக்கை பாருங்க – கம்பீர் கோரிக்கை

0
186
Gambhir

இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரும் துணை கேப்டனுமான சுப்மன் கில்லுக்கு வெளியில் இருந்து நாம் என்ன செய்யக்கூடாது என்பது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசியிருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்திருந்த கில், நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்து 119 ரன்கள் குவித்திருந்தார். அவரது சிறந்த பேட்டிங் செயல்பாடு இந்திய அணி தொடரை முழுவதுமாக கைப்பற்ற உதவியது.

- Advertisement -

ஒவ்வொரு இன்னிங்ஸிலும் செய்யாதீர்கள்

இந்தத் தொடருக்கு கில் துணை கேப்டனாக கொண்டுவரப்பட்ட பொழுது வெளியில் இருந்து நிறைய விமர்சனங்கள் உருவானது. குறைந்தபட்சம் துணை கேப்டன் பொறுப்பையாவது ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுத்திருக்க வேண்டும் என சில இந்திய முன்னாள் வீரர்களே வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய கம்பீர் கூறும் பொழுது “நாம் நம்முடைய வீரர்களை ஒவ்வொரு இன்னிங்ஸ் முடிவிற்குப் பிறகும் மதிப்பிடுவதுதான் இங்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. கில் இன்னும் இளமையான பேட்ஸ்மேன். அவருக்கு 25 வயதுதான் ஆகிறது. டெஸ்ட் கிரிக்கெட் கடினமானது அங்கும் அவரால் விளையாட முடியும் என காட்டி இருக்கிறார். தொடர்ந்து செல்லும் பொழுது அவர் அந்த வடிவத்திலும் மிகச்சிறந்தவராக மாறுவார்”

- Advertisement -

இரண்டு ஆண்டுகள் பொறுமையாக இருங்கள்

“நாம் இதுபோன்ற இளம் வீரரை ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் மதிப்பிடக்கூடாது. இப்படியான வீரர்களுக்கு ஓய்வறையில் நாம் நல்ல நம்பிக்கையை கொடுக்க வேண்டும். இதேபோன்று இருக்கும் எல்லா வீரர்களுக்கும் நாம் நம்பிக்கை கொடுத்து ஆட வைக்கும் பொழுது அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து இந்திய அணி எப்படி இருக்கும்? என நீங்களே கற்பனை செய்து பாருங்கள்”

இதையும் படிங்க : தோனி கண்ணை பார்த்தாலே பயம் வரும்.. ஆனா கோலி அந்த கலாச்சாரத்தை மாத்துனாரு – ஷிகார் தவான்

“இது ஒரு ஆரம்பம். நாம் அவரை நம்ப வேண்டும். அவர் தினமும் கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பையனாக இருக்கிறார். மேலும் கொடுக்கப்பட்ட துணை கேப்டன் பொறுப்பை அருமையாக செய்தார். அவருக்கு இப்படியான ஒரு பொறுப்பை கையில் கொடுத்த பிறகு அவர் மூன்று போட்டிகளிலும் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டார் என்று பார்க்க வேண்டும். இதன் மூலம் அவர் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபியிலும் முன்னேறி செல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -