15 வருட பசி.. உலக சாம்பியன் நாங்க இந்திய அணியை விட மாட்டோம்.. ஆடுகளம் இப்படித்தான் இருக்கும் – கேசவ் மகாராஜ் சவால்

0
96
Maharaj

அடுத்து இந்திய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்வதற்கு தங்கள் அணிக்கு நல்ல பசியும் ஆர்வமும் இருப்பதாக தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. இதன் காரணமாக தற்போது உலகச் சாம்பியன் ஆக இருக்கும் தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் வெல்வதற்கு விரும்புகிறது என்று கேசவ் மகாராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

உண்மையில் அணியில் இது இருக்கு

இது குறித்து கேசவ் மகாராஜ் பேசும்பொழுது ” இந்தியாவில் வைத்து இந்திய அணியை வெல்வதற்கு உண்மையில் எங்கள் அணியில் நல்ல பசியும் விருப்பமும் இருக்கிறது. நிச்சயமாக எங்களுடைய அட்டவணையில் இந்தத் தொடர் மிகவும் கடினமாக இருக்கப் போகிறது என்பது உண்மை. நாங்கள் இந்த சவாலை மிகவும் ஆர்வத்துடன் எதிர் நோக்குகிறோம்”

” இது எங்களுக்கு சிறந்த சோதனைகளில் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம். நாங்கள் இங்கு எவ்வளவு தாமதமாக வந்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒரு அருமையான வாய்ப்பு. மேலும் நாங்கள் ஆசியாவில் மற்ற அணிகளை வெல்ல ஆரம்பித்து விட்டோம். எனவே இங்கு இந்திய அணியையும் வெல்ல வேண்டும் என்கின்ற எங்கள் வேலை ஆரம்பித்து விட்டது”

- Advertisement -

நல்ல ஆடுகளம் இருக்கும்

“நாங்கள் பாகிஸ்தானில் அந்த அணிக்கு எதிராக விளையாடியது போல இங்கு ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு பெரிய சாதகமாக இருக்காது என்று நினைக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக கடைசி இரண்டு நாட்களில் மட்டுமே ஆடுகளம் பந்துவீச்சு சாதகமாக மாறும். சமீபத்தில் இந்தியாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை எடுத்து பார்க்கும் பொழுது இது தெரிகிறது”

இதையும் படிங்க : கொல்கத்தா ஆடுகளம் கம்பீர் கில் அதிருப்தி.. உள்ளே வந்த கங்குலி.. பிட்ச் அமைப்பாளருடன் நடந்தது என்ன?

“மேலும் தற்போது இந்திய அணி மாற்றத்தை செய்து நீண்ட தூரம் வந்து விட்டார்கள். அவர்கள் வெஸ்ட் இண்டீஸ் அனுப்பி எதிராக நல்ல ஆடுகளங்களை அமைத்து விளையாடினார்கள். எனவே தொடர்ந்து நல்ல விதமான ஆடுகளங்களை அமைப்பார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான அணியை வென்றதிலிருந்து உத்வேகத்தை எடுத்துக் கொள்கிறோம். அங்கு டாஸ் இழந்ததைப் பற்றி வருத்தப்படாமல் விளையாடி வென்றோம். அதையே இந்தியாவில் செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -