இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன், கேரளா உள்நாட்டு தொடரில் விளையாட மறுத்ததால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் சாம்சனுக்கு ஆதரவாக கேரள கிரிக்கெட் வாரியத்திடம் சில கேள்விகளை எழுப்பிய நிலையில் அது இப்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
சாம்சனுக்கு ஆதரவாக ஸ்ரீசாந்த்
இந்திய அணியின் நட்சத்திர டி20 தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் சமீபத்தில் உள்நாட்டுத் தொடரில் விளையாட மறுத்ததை அடுத்து, விஜய் ஹசாரே டிராபியில் கேரள கிரிக்கெட் வாரியம் அவரது பெயரை நீக்கியது. அது அப்போது பெரிய சர்ச்சையான நிலையில் அதன் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ள இந்திய அணியில் அவரது பெயர் சேர்க்கவில்லை. இதுகுறித்து அப்போதே பல முன்னாள் இந்திய வீரர்கள் கேள்விகளை எழுப்பினர்.
இந்த சூழ்நிலையில் கேரள கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் சில கேள்விகளை எழுப்பினார். விஜய் ஹசாரே டிராபியிலிருந்து சாம்சன் விலக்கியது முற்றிலும் நியாயமற்ற முடிவு எனவும், சாம்சனுக்கு பிறகு கேரள கிரிக்கெட் வாரியம் எத்தனை சர்வதேச வீரர்களை உருவாக்கியது எனவும் கேள்வி எழுப்பினார். இந்த சூழ்நிலையில் ஸ்ரீசாந்த் அவதூறு கருத்துக்களை கேரள சங்கத்தின் மீது கூறி இருக்கிறார் என அவர் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
பழசை மறந்துட்டீங்களா?
இதுகுறித்து அந்த அறிக்கையில் “ஸ்ரீசாந்த் மேட்ச் பிக்சிங் புகாரில் ஈடுபட்டு சிறையில் இருந்த போது, கேரள கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் அவருக்கு ஆதரவாக நின்றனர். எனவே இது போன்ற சூழ்நிலையில் ஸ்ரீசாந்த் மற்ற வீரர்களின் பாதுகாப்பை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கேரள கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பினால் மட்டுமே ஸ்ரீசாந்தின் தண்டனை முடிந்த பிறகு அவருக்கு ரஞ்சித் தொடரில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க:என்னை முதலில் மதிக்கணும்.. நான் கேப்டனா இருந்தா..முதல்ல 2 விஷயம் எதிர்பார்ப்பேன் – சுப்மான் கில் பேட்டி
மேட்ச் பிக்சிங் புகாரில் ஈடுபட்ட வீரர்களுக்கு மற்ற சங்கங்கள் இவ்வளவு சாதகமான அணுகுமுறையை எடுத்துள்ளதா? என்பது ஆராயத்தக்கது. மேலும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வென்ற அணியின் ஒரு பகுதி), நஜ்லா (19 வயதுக்குட்பட்ட அணியில்), மற்றும் முகமது இனான் (19 வயதுக்குட்பட்ட) ஆசியக் கோப்பை அணியில் விளையாடி இருக்கிறார்கள். கேரளா கிரிக்கெட் வாரியம் தரமான பிளேயர்களையும் உருவாக்கியுள்ளது” என பதில் அளித்துள்ளது.






