டி20 WC-ல் கோலி விளையாடக்கூடாதுனு ஜெய் ஷா நினைக்கிறார்.. ரோகித் சம்மதிக்கல – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

0
132
Virat

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில், இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியை வழிநடத்தி கேப்டன் ரோஹித் சர்மா தொடரை 4-1 என வென்று இருக்கிறார்.

விராட் கோலி மற்றும் முகமது சமி போன்ற பெரிய தாக்கம் தரக்கூடிய நட்சத்திர வீரர்கள் இல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அணியான இங்கிலாந்துக்கு எதிராக, ஐந்து இளம் வீரர்களுக்கு முதல் வாய்ப்பை கொடுத்து இந்திய அணி வென்று இருப்பது, இந்திய கிரிக்கெட் வாரியத்தை மிகவும் மகிழ்ச்சி படுத்தி இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இந்தத் தொடரை முடித்துக் கொண்டு இந்திய வீரர்கள் எல்லோரும் ஐபிஎல் தொடருக்கு தயாராக அவரவர் அணிகளின் பயிற்சி முகாம்களில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் மே மாத இறுதியில் ஐபிஎல் தொடர் முடிந்ததும், வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலக கோப்பைத்துடன் நடைபெற இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் விராட் கோலியை தேர்ந்தெடுக்க அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு விரும்பவில்லை என்றும், எனவே விராட் கோலி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினாலும் கூட அவரை தேர்வு செய்ய மாட்டார்கள் என்ற செய்தி வேகமாக பரவியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இப்படியான செய்திகளை யார் பரப்புகிறார்கள்? இந்த செய்திகளுக்கு என்ன அடிப்படை இருக்கிறது? விராட் கோலி நிச்சயம் டி20 உலக கோப்பை இந்திய அணியில் விளையாட வேண்டும், மேலும் அவர் விளையாடுவார் என்று தன்னுடைய கருத்தை கோபமாகவே பதிவு செய்திருந்தார்.

- Advertisement -

விராட் கோலி டி20 உலகக்கோப்பையில் விளையாடுவார்

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கீர்தி ஆசாத் இதுகுறித்து பேசும்பொழுது ” இந்திய தேர்வாளர்களிடம் பேசி விராட் கோலிக்கு டி20 உலகக்கோப்பை இந்திய அணியின் இடமில்லை என்று எல்லோரையும் நம்ப வைப்பதற்கு, ஜெய்ஷா எதற்காக தேர்வு குழு தலைவராக அஜித் அகர்கருக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும்? இதற்கு மே 15 வரை அகர்கருக்கு நேரம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் தன்னையோ மற்ற தேர்வாளர்களையோ சமாதானப்படுத்த முடியவில்லை.

இதையும் படிங்க : பாகிஸ்தான் கோச் பொறுப்பு 16.70 கோடி சம்பளம்.. மறுத்த வாட்சன்.. உண்மை காரணம் என்ன?

கிடைத்த ஆதாரங்களை நம்புவதாக இருந்தால், ஜெய் ஷா விராட் கோலி வேண்டாம் என்று ரோஹித் சர்மாவையும் அணுகி இருக்கிறார். ஆனால் ரோஹித் சர்மா கண்டிப்பாக தங்கள் அணிக்கு விராட் கோலி வேண்டும் என்று கூறியிருக்கிறார். விராட் கோலி நிச்சயம் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவார். இது குறித்த அறிவிப்பு அணித்தேர்வுக்கு முன்பாக வெளியிடப்படும்” எனக் கூறியிருக்கிறார்.