இந்திய கிரிக்கெட்

அகர்கர் ஐபிஎல்-ல பாக்காதீங்க.. என்னை மாதிரி ஆள செலக்ட் பண்ண இதை பாருங்க – கருண் நாயர் கோரிக்கை

இந்திய அணிக்கு வீரர்களை ஐபிஎல் தொடரை மட்டும் வைத்து தேர்வு செய்யக்கூடாது என மிகவும் வெளிப்படையாக ரவிச்சந்திரன் அஸ்வின் உடனான யூடியூப் உரையாடலில் கருண் நாயர் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

2018 ஆம் ஆண்டு இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட பிறகு கருண் நாயருக்கு முதல் முறையாக தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கடைசி இரண்டு வருடத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டில் எல்லா வடிவத்திலும் மிகச் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்து இருக்கிறார்.

ஐபிஎல் மட்டுமே போதாது

இதுகுறித்து கருண் நாயர் பேசும் பொழுது ” இந்திய டெஸ்ட் அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் பொழுது ஐபிஎல் தொடர் ஒரு அளவுகோலாக இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். முதலில் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும், அடுத்து ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடிய கலவையாக இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய நேர்மையான கருத்து”

“ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஒரே காரணத்திற்காக இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யக்கூடாது. அது சரியானதாக இருக்க முடியாது. ஏனென்றால் அங்குதான் கடினமான விஷயங்கள் நடக்கிறது. நீங்கள் உள்நாட்டு முதல் தர கிரிக்கெட்டில் ஆறு மாதங்களில் பல்வேறு அணிகளுக்கு எதிராக விளையாடுகிறீர்கள்”

- Advertisement -

ஐபிஎல் தொடரும் முக்கியமானது

“நீங்கள் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்காக விளையாடும் பொழுதும் அந்த அணிக்கு தகுந்த மாதிரி மாறிக்கொள்ள வேண்டியது இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடரில் நிறைய வீரர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பல அணிக்கு மாறும் பொழுது பல மாதிரி உங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது கடினமான விஷயம். எனவே உங்களால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட முடிந்தால் உலகில் எங்கும் சிறப்பாக விளையாட முடியும்”

இதையும் படிங்க : இந்திய சின்ன பசங்க டீம்கிட்ட.. எங்க இங்கிலாந்து டெஸ்ட்ல தோற்கும்.. காரணம் இதுதான் – பனேசர் கணிப்பு

“நான் நீக்கப்பட்ட 2018 ஆம் வருடத்தை விட மூன்று வருடங்களுக்கு முன்பு தான் அதிக கடினமான காலமாக இருந்தது. நான் திடீரென கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததை உணர்ந்தேன். பிறகு நான் கிரிக்கெட் விளையாட முடிவு செய்து ஆரம்பித்தேன். அங்கிருந்து கடுமையாக உழைத்து தற்போது இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts