நடந்து முடிந்த விஜய் ஹசாரே டிராபியில் 779 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்திய கருண் நாயர் தான் சாம்பியன் டிராபியில் விளையாட நினைக்கவில்லை என்று அதிரடியாக கூறியிருக்கிறார்.
இந்த வருடம் இந்தியாவின் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் கருண் நாயர் யாரும் எதிர் பார்க்காத அளவுக்கு மிகச் சிறப்பாக விளையாடினார். விளையாடிய எட்டு போட்டியில் மொத்தம் ஐந்து சதங்கள் அடித்தார். மேலும் இதில் அவர் ஆறு முறை ஆட்டம் இழக்காமலும் இருந்தார். இவரைச் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசி இருக்கும் கருண் நாயர் கூறும் பொழுது “நான் நேர்மையாக சொல்வது என்றால், நான் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது குறித்து எதுவுமே நினைக்கவில்லை. அது எனக்கு வெகு தொலைவில் இருக்கிறது என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும். மேலும் நான் முன்பே கூறியுள்ளது போல எனக்கு இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற கனவு இருப்பது உண்மை. அதற்காக நான் சாதிக்க விரும்புகிறேன்”
“நான் அந்த சூழ்நிலையை உருவாக்குவேன் என்று நீங்கள் நினைக்கவில்லை. நான் இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவேனா? என்பது குறித்தான கேள்வி என்னுடைய தலையில் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கவே செய்தது. ஆனால் நான் இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வேண்டும் என்கின்ற எண்ணத்தில் இல்லை”
“இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்கின்ற கனவு எனக்கு இருக்கிறது. நான் இதை பலமுறை நேர்காணல்களில் சொல்லியிருக்கிறேன். மிக நேர்மையாக இந்த எண்ணம் மட்டுமே என் மனதில் இருக்கிறது. ஆனால் என் பெயர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பரிசீலிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. அப்படி நடந்ததற்கு நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்”
இதையும் படிங்க : விராட் கோலிக்கு அந்த பெருமை இல்ல..5 6 வருஷத்துக்கு முன்னவே வெளியே போயிட்டாரு – ரிக்கி பாண்டிங் சர்ச்சை கருத்து
“சச்சின் மாதிரியான உங்கள் சிறுவயது ஹீரோவிடம் இருந்து நீங்கள் பாராட்டு பெறுவது மிகவும் தனித்துவமான உணர்வு. அவர் எனக்காக நேரம் ஒதுக்கி எனக்கு வாழ்த்து செய்தி எழுதியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் கொடுத்தது. நான் இதற்காக அவருக்கு பெரிய நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.