தற்போது இந்திய அணிக்கு கம்பீர் ஒரு மேனேஜராக இருக்க முடியும் ஆனால் பயிற்சியாளராக இருக்க முடியாது என கபில்தேவ் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணிக்கு இந்திய முன்னாள் வீரர் கம்பீர் தற்போது தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் வீரர்களை நிர்வகிக்கும் ஒரு மேனேஜராக செயல்பட முடியும் ஆனால் பயிற்சியாளராக செயல்பட முடியாது என கபில்தேவ் கூறி இருக்கிறார்.
கபில்தேவ் வார்த்தையின் நியாயம்
பொதுவாக சர்வதேச கிரிக்கெட் மட்டத்தில் பயிற்சியாளர்கள் என்பதை விட வீரர்களை புரிந்து அவர்களை நிர்வகிக்கும் மேனேஜர்கள் தான் தேவையாக இருக்கிறார்கள். ஒரு வீரர் உருவாகும் கட்டத்தில்தான் அவர்களை உருவாக்குவதற்கு பயிற்சியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வரும் பொழுது தேவையான எல்லா பயிற்சிகளையும் செய்துவிட்டே வருகிறார். எனவே சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்ததும் அங்கு அவருக்கு ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லவும், அவர்களை தன்னம்பிக்கையுடன் வைத்திருக்கவும் தான் ஒரு மேனேஜர் தேவையாக இருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணமாக ரவி சாஸ்திரி இருந்திருக்கிறார்.
முழு பயிற்சியாளராக முடியாது
இதுகுறித்து கபில்தேவ் பேசும்பொழுது “இன்று பயிற்சியாளர் என்பது ஒரு பொதுவான வார்த்தையாக மாறிவிட்டது. தற்போது கம்பீரை எடுத்துக் கொண்டால் அவர் மேனேஜராக இருக்க முடியும் பயிற்சியாளராக இருக்க முடியாது. பயிற்சியாளர் என்று சொல்லும் பொழுது நான் கல்லூரியில் மற்றும் அதற்கு அடுத்த விளையாடிய இடங்களில் இருந்தவர்கள்தான் அந்த பொறுப்புக்கானவர்கள்”
இதையும் படிங்க : 356 ரன்.. ஸ்டோக்ஸ் ஆர்ச்சர் போராட்டம்.. உடைத்துவிட்ட ஹெட் அதிரடி சதம்.. இங்கிலாந்து பரிதாப நிலை
“லெக் ஸ்பின்னர் என்று ஒருவர் வரும்பொழுது அவருக்கு எப்படி கம்பீர் பயிற்சி அளிக்க முடியும்? இல்லை ஒரு விக்கெட் கீப்பருக்கு எப்படி அவர் பயிற்சி அளிக்க முடியும்? நீங்கள் வீரர்களை நிர்வகிக்க முடியும். அதுதான் மிகவும் முக்கியமானது. அவர்களால் முடியும் என ஊக்கப்படுத்துகிறீர்கள். இந்த முறையில் வீரர்களை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும். இதை ஒரு மேனேஜராக அவர் செய்யலாம்” என்று கூறியிருக்கிறார்.






