தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது 147 வருட சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.
இந்த நாட்களுக்கு முன்பு துவங்கிய நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஒல்லி போப் சதம் அடித்து 121 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸ் விளையாடி 457 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியை விட 41 ரன்கள் முன்னிலையும் பெற்றது. அந்த அணிக்கு கெவிம் ஹாட்ஜ் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 120 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஹாரி புரூக் சதம் அடித்து 109 ரன்கள், ஜோ ரூட் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 122 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 425 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 385 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை 1877ஆம் ஆண்டு விளையாடியது. அதிலிருந்து தற்போது 2024 வரையில் 147 ஆண்டுகளாக ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் 400 ரன்கள் எடுத்தது கிடையாது. ஆனால் இன்று முதல்முறையாக இங்கிலாந்து அணி தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 400 ரன்கள் தாண்டி எடுத்திருக்கிறது.
இதையும் படிங்க : 25 பந்தில் ருத்ர தாண்டவம்.. ஷாருக்கான் அதிரடியை வீணாக்கிய சாய் சுதர்சன்.. அஸ்வினின் திண்டுக்கல் கோவை அணியை வென்றது
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா இதுபோல ஆறு முறை இரண்டு இன்னிங்ஸ்களிலும் 400 ரன்கள் கடந்து இருக்கிறது. மேலும் இந்தியா மூன்று முறையும் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா இரண்டு முறையும் இதைச் செய்திருக்கின்றன. தற்பொழுது இங்கிலாந்து இந்த பட்டியலில் உள்ளே வந்திருக்கிறது.