இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விராட் கோலியை பார்த்து ஒரு குறிப்பிட்ட விஷயத்தை கேன் வில்லியம்சன் முக்கியமான ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், அவர் சில காலம் கிரிக்கெட் விளையாடுவதை தான் பார்க்க விரும்புதாகவும் கூறியிருக்கிறார்.
நடக்கும் டி20 உலக கோப்பை தொடரில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் சுற்று உடன் அதிர்ச்சி தோல்விகள் அடைந்து வெளியேறியது. மேலும் கேன் வில்லியம்ஸ் அண்ட் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு அந்த அணிக்கு கை கொடுக்கவில்லை.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன் ஸ்ட்ரைக் ரேட் 123, ஐபிஎல் தொடரில் 125, ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 122 என மிகவும் சுமாராக இருக்கிறது. மாறிவரும் கிரிக்கெட்டில் இவ்வளவு குறைவான ஸ்டிரைக் ரேட் வைத்து போட்டிகளை வெல்ல முடியாது. அதே சமயத்தில் விராட் கோலி எப்பொழுதும் இல்லாத அளவுக்கு தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 155க்கு உயர்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கேன் வில்லியம்சன் பற்றி மைக்கேல் வாகன் கூறும்பொழுது “வில்லியம்சன் எப்பொழுதும் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் வீரராக இருப்பார் என்று நான் நினைப்பது கிடையாது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலியை பார்த்தால், அவர் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு தனது ஸ்ட்ரைக் ரேட்டை 155 க்கு உயர்த்தி இருக்கிறார். சுழல் பந்துவீச்சுக்கு ஸ்லாக் ஸ்வீப்பை கொண்டு வந்தார். விராட் கோலியை பார்த்து கேன் வில்லியம்சன் தனது டெம்போவை 15 சதவீதம் உயர்த்த பார்க்க வேண்டும்.
வில்லியம்சன் 140 முதல் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் நியூசிலாந்து மற்றும் எந்த அணிக்கு அவர் ஒரு பசை போல் நின்று விளையாடினாலும் அது மிகப்பெரிய விஷயமாக இருக்கும். ஏனென்றால் தொடர்ந்து ரன்கள் எடுக்க முடிந்தவர். மேலும் அவரை நான் சில காலம் டி 20 கிரிக்கெட்டில் பார்க்க விரும்புகிறேன்.
இதையும் படிங்க : 27 பந்தில் சதம்.. 18 சிக்ஸர்கள்.. கெயில் ரெக்கார்டை உடைத்த வீரர்.. 2 மெகா புதிய உலக சாதனைகள்
அவரைப் பொறுத்தவரையில் அவர் விளையாட வேண்டிய அவசியம் இருக்கின்ற ஒரு வகையான பேட்டர். அவருக்கு பேட்டிங் செய்யும் பொழுது கொஞ்சம் நேரம் வேண்டும். அவருக்கு ரிதம் கிடைத்த பிறகு சிறப்பாக பேட்டிங் செய்வார். அதே சமயத்தில் ஐபிஎல் தொடரில் இரண்டு மூன்று போட்டிகளில் விளையாட வைத்து அவரிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.






