நேற்று எஸ்டோனியா மற்றும் சைப்ரஸ் அணிகளுக்கு இடையேயான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில், எஸ்டோனியா வீரர் சாகில் சவுகான் 27 பந்துகளில் சதம் அடித்து, கிறிஸ் கெயில் அடித்திருந்த அதிவேக டி20 கிரிக்கெட் சாதனையை முறியடித்து புதிய உலகச் சாதனை படைத்திருக்கிறார்.
2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் ஆர்சிபி அணிக்காக புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 27 பந்தில் அதிரடியாக சதம் அடித்தார். மேலும் அவர் அந்தப் போட்டியில் 66 பந்துகளில் 13 பவுண்டரிகள் 17 சிக்ஸர்கள் அடித்து புதிய உலகச் சாதனைகளை படைத்தார். அதிவேக சதம், அதிக சிக்ஸர்கள், ஒரு டி20 போட்டியில் அதிக ரன்கள் என மூன்று உலக சாதனைகளை கிறிஸ் கெயில் அப்பொழுது படைத்தார்
நீண்ட காலமாக டி20 கிரிக்கெட்டில் நிலைத்து வந்த அதிவேக சதம் மற்றும் அதிக சிக்ஸர்கள் என இரண்டு சாதனைகளை நேற்று எஸ்டோனியா வீரர் சாகில் சவுகான் சைப்ரஸ் அணிக்கு எதிரான போட்டியில் முறியடித்திருக்கிறார். எஸ்டோனியா அணி இலக்கை துரத்திய இந்த போட்டியில் அவரது அதிரடியான பேட்டிங் வெளிப்பட்டிருக்கிறது
நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சைப்ரஸ் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. எஸ்டோனியா அணிக்காக களம் இறங்கிய 32 வயதான சாகில் சவுகான் அதிரடியாக 27 பந்துகளில் சதம் அடித்தார். மேலும் அவர் தொடர்ந்து விளையாடி 41 பந்துகளில் 144 ரன்கள் அடிக்க அந்த அணி எளிதாக வெற்றி பெற்றது. மேலும் நேற்றைய போட்டியில் மொத்தம் 18 சிக்ஸர்கள் மற்றும் ஆறு பவுண்டரிகள் அடித்திருக்கிறார். நேற்று அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 351.21 என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த ஐந்து வீரர்கள் :
சாகில் சவுகான் – எஸ்டோனியா – 27 பந்து
கிறிஸ் கெயில் – ஆர்சிபி – 30 பந்து
ரிஷப் பண்ட் – டெல்லி கேப்பிடல்ஸ் – 32 பந்து
விகான் லூப் – நார்த் வெஸ்ட் – 33 பந்து
ஜான் நிக்கோல் லோஃப்டி ஈடன் – நமீபியா – 33 பந்து
இதையும் படிங்க : என் கிரிக்கெட் எதிர்காலம் என்னனே தெரியல.. ஆனா இங்க 2 விஷயத்தை நினைச்சா வெறுப்பா இருக்கு – கேன் வில்லியம்சன் வருத்தம்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஐந்து வீரர்கள் :
சாகில் சவுகான் – சைப்ரஸ் அணிக்கு எதிராக 18 சிக்ஸர்கள்
ஹசரத்துல்லாஹ் ஷஷாய் – அயர்லாந்து அணிக்கு எதிராக 17 சிக்ஸர்கள்
பின் ஆலன் – பாகிஸ்தான் அணிக்கு எதிராக 16 சிக்ஸர்கள்
ஜீசான் குக்கிக்கேல் – 15 சிக்ஸர்ர்கள்
ஆரோன் பின்ச் – இங்கிலாந்து அணிக்கு எதிராக 14 சிக்ஸர்கள்