நீல் வாக்னர் கட்டாய ஓய்வு.. ராஸ் டெய்லர் புகார்.. மௌனம் கலைத்த கேன் வில்லியம்சன்

0
2922

ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடும் வேளையில், நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் நீல் வாக்னர் யாரும் எதிர்பாராத விதமாக டெஸ்ட் தொடருக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது ஓய்வினை அறிவித்தார்.

ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. டி20 தொடரை ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ள நிலையில், முதல் டெஸ்ட் போட்டியிலும் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் தனது ஓய்வினை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் ராஸ் டெய்லர் நீல் வாக்னரின் ஓய்வு கட்டாயப்படுத்தி எடுக்கப்பட்ட முடிவு மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட்டில் அமைதியற்ற சூழல் நிலவுவதாகவும் குற்றம் சாட்டினார்.

- Advertisement -

தற்போது 37 வயதாகும் நீல் வாக்னர் 2012 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது முதல் சர்வதேச தொடரில் விளையாடினார். இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நீல் வாக்னர் 260 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 5 விக்கெட்டுகள் ஒன்பது முறை எடுத்துள்ளார். தனது கடைசி டெஸ்ட் போட்டியை பிப்ரவரி மாதம் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக விளையாடும் நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தனது ஓய்வு முடிவினை அறிவித்தார்.

நீல் வாக்னரின் இந்த ஓய்வு பல கிரிக்கெட் வல்லுனர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் நிலையில், நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் ராஸ் டெய்லர் “இப்போது எல்லாம் புரிகிறது என்று நினைக்கிறேன். இது அவரை கட்டாயப்படுத்தி ஓய்வு பெற வைத்ததாகவே எனக்கு தோன்றுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அவர் தனது ஓய்வினை அறிவித்திருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. இது நியூசிலாந்து அணியில் அமைதியற்ற சூழ்நிலை இருப்பதாகவே குறிக்கிறது”என்று கூறியிருக்கிறார்.

ஆனால் ராஸ் டெய்லரின் கருத்தை மறுக்கும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் இது குறித்து கூறுகையில் “ட்ரெஸ்ஸிங் ரூமில் அவருடனான ஒரு உறவு எங்களுக்கு எப்போதும் நல்ல முறையில் இருந்துள்ளது. வால்க்னர் நியூசிலாந்து அணிக்காக நம்ப முடியாத பல விஷயங்களை செய்துள்ளார். அவரது திறமை எங்கள் அணிக்கு நன்கு தெரியும். அவர் தனது இதயத்தையும், ஆன்மாவையும் நியூசிலாந்து அணிக்காக எப்போதும் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க: மீண்டும் வசமாக சிக்கிய ஸ்டோக்ஸ்.. வறுத்தெடுக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.. என்ன நடந்தது

வார்னர் கட்டாய ஓய்வு பெற்றார் என்று நான் நினைக்கவில்லை. ஒரு குழுவாக நாங்கள் அணியை மேம்படுத்த பல முயற்சிகளை தொடர்ந்து செய்து வந்து கொண்டிருக்கிறோம். அணியில் பல வீரர்கள் மற்றும் ஊழியர்கள் வந்து செல்கின்றனர். எனவே என்னை விட அணியின் சூழ்நிலை அவர்களுக்கு தெரிந்திருக்கலாம். எனவே இவற்றையெல்லாம் களைந்து ஒரு அணியாக முன்னேற நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்” என்று ராஸ் டெய்லரின் கருத்தை மறுக்கும் விதமாக கேன் வில்லியம்சன் கூறி இருக்கிறார்.