இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. ஸ்ரேயாஸ் ஐயரை ஏன் சேர்க்கவில்லை.. இன்னும் என்ன செய்யனும்? -கங்குலி கேள்வி

0
131

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் இந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான் ஆகியோர் முக்கிய இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இருவருக்குமே வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில காலமாக ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடி வருகிறார்.ஐபிஎல் தொடரில் கேப்டனாக சாம்பியன் பட்டம் மற்றும் ரன்னர் அப் பட்டம், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என ஸ்ரேயாஸ்  நல்ல பார்மில் இருக்கிறார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் அபாரமாக விளையாடுகிறார்:

அது மட்டும் இல்லாமல் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் ஸ்ரேயாஸ் அபாரமாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் நீக்கப்பட்டதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர்,”ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஒரு ஆண்டாக அபாரமாக விளையாடி வருகிறார்.”

“அவரை கண்டிப்பாக அணியின் சேர்த்து இருக்க வேண்டும். கடந்த 12 மாதங்களில் அவர் ஆடிய ஆட்டத்தை பாருங்கள். அவரைப் போன்ற ஒரு வீரரை நிச்சயமாக அணியை விட்டு நீக்கிருக்கக் கூடாது. ஸ்ரேயாஸ் கடும் நெருக்கடியில் கூட தற்போது ரன்களை சேர்த்து வருகிறார். பொறுப்புகளை எடுத்துக் கொண்டு விளையாடுகிறார். ஷார்ட் பாலை அபாரமாக எதிர்கொள்கின்றார்.”

- Advertisement -

ஏன் வெற்றி பெற் முடியாது?:

“டெஸ்ட் கிரிக்கெட் என்பது முற்றிலும் வித்தியாசமானது என்றாலும் நிச்சயமாக நான் அவரை அணியில் சேர்த்து இருப்பேன். ஏனென்றால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் என்ன செய்யப் போகிறார் என்ற ஆவல் எனக்கு இருக்கின்றது. இங்கிலாந்து தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் இரண்டு விஷயங்கள் சரியாக நடக்க வேண்டும்.”

இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு சென்று பவரை காட்டும் கம்பீர்.. ஏமாற்று வேலைக்கு முற்றுப்புள்ளி.. என்ன நடந்தது?

“அதில் ஒன்று இந்திய வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். மற்றொன்று பும்ரா தொடர் முழுவதும் நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். 2020-21ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் மெல்போர்னில் நாம் வெற்றி பெற்றோம். அந்தத் தொடரில் கூட விராட் கோலி,ரோஹித் சர்மா இல்லை.எனவே நாம் வெற்றி பெற மாட்டோம் எனவே சொல்வதற்கான காரணங்களை என்னால் பார்க்க முடியாது” என்று கங்குலி கேள்வி எழுப்பி உள்ளார்.

- Advertisement -