நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை இழந்து தொடரையும் பாகிஸ்தான் அணி இழந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் மிகவும் வேதனையான முறையில் பேசியிருக்கிறார்.
தற்போது பங்களாதேசுக்கு வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யாமல் பந்துவீசி மோசமான முறையில் தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது.
அசோசியேட் ஆகி விடுவோம்
தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் பாகிஸ்தான் தொடர்ந்து தோல்விகளை அடைந்து வருகின்ற காரணத்தினால் மிகவும் சிறிய அணியாக அசோசியேட் நாடாக கிரிக்கெட்டில் பாகிஸ்தான் மாறிவிடும் என அகமத் சேஷாத் கவலை தெரிவித்திருக்கிறார்.
கிரிக்கெட் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட்டில் கூட நல்ல பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களும் சில பேர் கிடைக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் மிக மோசமாக உள்ளது.
கடவுள்தான் பார்க்க வேண்டும்
இதுகுறித்து கம்ரன் அக்மல் பேசும்பொழுது “கடவுளே! பாகிஸ்தான் கிரிக்கெட்டை பாருங்கள் நாம் எந்த அளவுக்கு கீழே சென்று விட்டோம். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைத்தால் நெதர்லாந்து அணி தங்களுக்கும் டெஸ்ட் அந்தஸ்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கும். நீங்கள் உங்கள் கிரிக்கெட்டை கேலி செய்து விட்டீர்கள். இதற்காக நீங்கள் வருத்தப்படுவதில்லை”
இதையும் படிங்க : இந்த ஐபிஎல் தொடரில் இவங்கதான் பாவப்பட்ட அணி.. இப்போ ரொம்ப மோசமா இருக்காங்க – சுரேஷ் ரெய்னா கருத்து
” நீங்கள் போட்டியில் தோற்று விட்டீர்கள். இப்படிப்பட்ட போட்டியில் என்ன மாதிரியான பரிசோதனைகளை நீங்கள் செய்து கொண்டு உள்ளீர்கள். பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் டாஸ் வென்றதும் நீங்கள் ஏன் பந்துவீச்சுக்கு சென்றீர்கள். இப்படியான தொடர்களை வெல்லாமல் நீங்கள் எப்படி முன்னேறுவீர்கள். ஐசிசி கோப்பைகளை திருடுவதற்கு முடிவு செய்து விட்டீர்களா?” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.






