இந்த ஐபிஎல் தொடரில் இவங்கதான் பாவப்பட்ட அணி.. இப்போ ரொம்ப மோசமா இருக்காங்க – சுரேஷ் ரெய்னா கருத்து

0
37

ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் ஆனது வருகிற 28ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் விரரும் சென்னை அணியின் முன்னாள் வீரருமான சுரேஷ் ரெய்னா இது குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் வலுவாக இருக்கும் நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பவுலர்கள் எதிர்பாராத விதமாக காயம் அடைந்து வருகிறார்கள். டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியாவின் ஹர்ஷித் ராணா காயமடைந்த காரணத்தால் அவர் உலகக்கோப்பை தொடரை முற்றிலும் தவற விட்டார். மேலும் அவரது காயம் இன்னும் குணமடையாமல் இருக்க அவர் முழு ஐபிஎல் தொடரிலும் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல மற்றொரு இலங்கை அணியின் பவுலரான மத்திஷா பத்திரனா காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவரும் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் வங்கதேசத்தின் முஸ்தபிக்குர் ரஹ்மான் கொல்கத்தா அணியிலிருந்து விலக அந்த அணியின் பவுலின் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

- Advertisement -

இது குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறும்போது “பத்திரனா காயமடைந்துள்ளார் ஹர்ஷித் ராணாவும் காயமடைந்துள்ளார். இதில் ஹர்ஷித் ராணா காயம் தான் மிகப்பெரிய பின்னடைவு என்று கருதுகிறேன். அவர் முழு ஐபிஎல் தொடரில் கூட விளையாட முடியாமல் போகலாம். காயம் குணமடைந்து வந்தாலும் மீண்டும் அவர் விளையாடுவதற்கு சிறிது காலம் எடுக்கும். இதனால் கே கே ஆர் அனைத்து தற்போது கார்த்திக் தியாகி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

மேலும் பதிரானா நிச்சயம் விளையாட வேண்டி இருக்கும். மேலும் மற்றொரு ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் இருக்கிறார். இதனை சமாளிக்கும் விதமாக வைபவ் அரோராவை தேர்வு செய்யலாம். மேலும் அணியில் வருண் மற்றும் சுனில் என இரண்டு தரமான சுழற் பவுலர்கள் உள்ளனர். அவர்களோடு பதிரானா அணியில் கிடைத்தால் டெத் பௌலிங் பிரச்சினை தீர்ந்து விடும்” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -