பாகிஸ்தான் கிரிக்கெட் பத்தி இந்தவொரு விஷயம் தெளிவாகிடுச்சு.. பெரிய அவமானம் – கம்ரன் அக்மல் விமர்சனம்

0
28
Akmal

இன்று உலக கிரிக்கெட்டில் அமெரிக்க அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததுதான் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்து வருகிறது. பாகிஸ்தான் அணி மீது உள்நாட்டில் இருந்து பெரிய விமர்சனங்கள் எழுப்பப்படுகிறது. இந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்று பாகிஸ்தான் அணி பேட்டிங் பவுலிங், பீல்டிங் என எல்லாவற்றிலும் அமெரிக்க அணியை விட பின்தங்கி இருந்தது. அமெரிக்க அணி சிறப்பாக செய்தது என்றல்லாமல் பாகிஸ்தான அணி மிக மோசமாக மூன்று துறைகளிலும் செயல்பட்டது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் தேர்வு, மற்றும் களத்தில் வீரர்கள் வெளிப்படுத்திய விழிப்புணர்வு மிக மோசமாக இருந்தது. அது கடைசி ஓவர் வரை அப்படியே தொடர்ந்தது. இதன் காரணமாகத்தான் அமெரிக்க அணியால் வெல்ல அடைந்தது. பாகிஸ்தான் பாதி தவறுகளை செய்யாமல் இருந்தால் கூட வெற்றி பெற்று இருக்க முடியும்.

மேலும் கேப்டன்சி பொறுப்புக்கு மீண்டும் கொண்டுவரப்பட்ட பாபர் அசாமுக்கு நிறைய நெருக்கடிகள் உண்டாகி இருக்கிறது. இதன் காரணமாக நாளை மறுநாள் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கும் போட்டி முக்கியமானதாக மாறுகிறது. இதனால் இயல்பாக அவர்களுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது.

தற்பொழுது இது குறித்து கம்ரன் அக்மல் கூறும் பொழுது ” சூப்பர் ஓவரில் அமெரிக்க அணியிடம் ஆட்டத்தை இழந்தது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அவமானம். இதைவிட பெரிய அவமானம் இருக்க முடியாது. அமெரிக்கா சிறப்பாக விளையாடியது. தரவரிசையில் கீழே இருக்கும் அணி விளையாடியது போல நான் அவர்களை உணரவே இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : தப்பா நினைக்காதிங்க.. பாகிஸ்தான் சூப்பர் ஓவர்ல இந்த தப்பான முடிவை ஏன் எடுத்திங்க? – யுவராஜ் சிங் கேள்வி

அவர்கள் எங்களை விட சிறந்த கிரிக்கெட் விளையாடியதால் அவர்கள் வெற்றி பெறுவதற்கு தகுதியானவர்கள். நேற்றைய தோல்வி மூலமாக எங்களின் கிரிக்கெட் முகம் வெளிப்பட்டு விட்டது நாங்கள் எங்களுடைய கிரிக்கெட்டை எப்படி முன்னோக்கி கொண்டு செல்கிறோம் என்பது தெளிவாக தெரிந்து விட்டது” என்று கூறியிருக்கிறார்.