தற்போது உலகக் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருக்கும் அளவுக்கு குழப்பம் வேறு எந்த நாட்டு கிரிக்கெட்டிலும் கிடையாது என்று கூறலாம். அந்த அளவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிறைய பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்பன் அக்மல் புதிய கேப்டனை நியமிப்பது தொடர்பாக விமர்சனம் செய்திருக்கிறார்.
பாகிஸ்தான அணி முதல்முறையாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரை சொந்த நாட்டில் இழந்து ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதற்கு அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மீண்டும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான சிக்னல்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் குழப்ப வேலை
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடர் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக மூன்று முடிவை பாகிஸ்தான் அணிக்குமான கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகிக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து சிவப்புப் பந்துக்கு ஷான் மசூத் மற்றும் வெள்ளைப்பந்துக்கு ஷாகின் அப்ரிடி ஆகியோரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்தது. இந்த நிலையில் திடீரென மீண்டும் பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணிகளுக்கு பாபர் அசாமை கேப்டனாக கொண்டு வந்தது. ஷாகின் அப்ரிடி நீக்கப்பட்ட காரணம் தெரியவே இல்லை. அதே சமயத்தில் முகமது ரிஸ்வான் கேப்டனாக கொண்டு வரப்படாததற்கான காரணமும்தெரியவில்லை.
விராட் கோலி ரோஹித் சர்மாவை கொண்டு வரப் போகிறீர்களா?
இந்த நிலையில் புதிய கேப்டனை நியமிப்பது தொடர்பான முடிவு குறித்து பேசி இருக்கும் கம்ரன் அக்மல் கூறும்பொழுது ” ஆசியக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை என மூன்று பெரிய தொடர்களை பாகிஸ்தான் அணி இழந்த பிறகு மாற்றத்தை கொண்டுவர விரும்பாத இவர்கள், இப்பொழுது எதன் அடிப்படையில் மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறார்கள்? இதுஎன்ன வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது?”
“பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு பிடித்த வீரரை கேப்டனாக கொண்டு வருவதால் என்ன பயன்? அப்படி வருகின்ற புதிய கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்மித், ஸ்டார்க் இப்படியானவர்களை அணிக்குள் கொண்டு வந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை பலப்படுத்த போகிறாரா?”
இதையும் படிங்க : எனக்கு பிடித்த சிறந்த கேப்டன் இவர்தான்.. அந்த ஒரு விஷயம் மட்டுமே ஈர்க்காம போயிடுச்சு – யுவராஜ் சிங் கருத்து
“இப்படி எல்லாம் கேப்டனை நியமித்துக் கொண்டிருந்தால் நீங்கள் சரியான வழிமுறையை பின்பற்றவில்லை என்று அர்த்தம். இதற்குப் பின்பும் பழைய தவறுகளே தொடர்ந்து நடக்கும். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் சரியான திசையை அமைத்து தங்களது சிந்தனையை சரி செய்து கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.