இந்தியாவின் மிகச்சிறந்த சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் தான் விளையாடிய மூன்று கேப்டன்களில் தனக்குப் பிடித்த சிறந்த கேப்டன் யார் என்று கூறியிருக்கிறார்.
யுவராஜ் சிங் சவுரவ் கங்குலி தலைமையின் கீழ் அறிமுகமானார். மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் விளையாடி இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற அணியில் இடம் பிடித்தார். இறுதியாக விராட் கோலி தலைமையில் விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
மறக்க முடியாத அறிமுகம்
இந்திய கிரிக்கெட்டில் இளம் திறமைகளை தங்கு தடையின்றி கொண்டு வந்தால் மட்டுமே முன்னேறி செல்ல முடியும் என்பதை சௌரவ் கங்குலி கேப்டனாக உணர்ந்திருந்தார். இதன் காரணமாக சிறிய நகரங்களில் திறமையான வீரர்கள் இருந்தாலும் கூட அவர்களை கண்டறிந்து இந்திய அணிக்கு கொண்டு வருவதில் பெரிதும் ஆர்வம் காட்டினார். அப்படி வரக்கூடிய வீரர்களுக்கு அணிக்குள் மிகப்பெரிய ஆதரவை கொடுத்தார்.
இந்த வகையில் யுவராஜ் சிங் 2000ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கென்யா அணிக்காக அறிமுகமானார். ஆனால் அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அச்சமின்றி விளையாடிய அவரது பேட்டிங் அபாரமான ஃபீல்டிங் திறமை உலகத்தையே கவர்ந்தது. அங்கிருந்து இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக வந்தார். பிறகு இந்திய அணி வென்ற இரண்டு உலகக் கோப்பைகளின் கதாநாயகனாக இருந்தார். அவர் இல்லையென்றால் அந்த இரண்டு உலகக்கோப்பையும் இல்லை என்றும் கூறலாம்.
எனக்கு பிடித்த கேப்டன் இவர்தான்
தான் விளையாடியதில் தனக்கு பிடித்த கேப்டன் யார் என்று கூறியுள்ள யுவராஜ் சிங் பேசும்பொழுது “நான் விளையாடியதில் எனக்கு மிகவும் பிடித்த கேப்டன் சௌரவ் கங்குலிதான். நான் விளையாடிய அனைத்து கேப்டன்களிலும் அவரே மிகவும் ஆதரவு தந்த கேப்டனாக இருந்தார். தாதா இளம் திறமைகளை வளர்த்தெடுத்தார். அப்போதே இந்திய அணியை வலிமையாக உருவாக்குவதற்கு நான்கைந்து சிறந்த இளம் வீரர்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அவர் அனைவரையும் ஆதரித்தார்”
இதையும் படிங்க : 170 ரன்.. பலமான இங்கிலாந்து பெண்கள் அணி.. அயர்லாந்தின் ஒரே வீராங்கனை வீழ்த்தினார்.. அபார வெற்றி
“தாதாவால் நாங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஈர்க்கப்படவில்லை. அவர் இந்திய அணியின் கேப்டன். அவர் ஒரு மிகப்பெரிய பெயர். ஆனால் அதற்கேற்றபடி அவர் உடை அணிய மாட்டார். ப்ளீஸ் நீங்கள் இந்திய கேப்டன் இப்படி உடை அணியக்கூடாது என்று சொன்னால் இப்படியே இருக்கட்டும் அதுவெல்லாம் முக்கியம் கிடையாது” என்று தெரிவித்திருக்கிறார்.