இந்திய கோச்சா வர கேஎல் ராகுல் தடுத்திட்டார்.. அரசியல் இருக்கும்னு சொன்னார் – ஜஸ்டின் லாங்கர் பேட்டி

0
1012
Langer

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கேஎல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி சிறப்பாக விளையாடி கடைசி நேரத்தில் சரியாக விளையாட காரணத்தால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இந்த நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

கடுமையான பயிற்சிகளுக்கும் கட்டுப்பாட்டான நெறிமுறைக்கும் பெயர் பெற்றவர் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். இதன் காரணமாகவே 2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலியா அணியை மீட்டார். ஆனால் நீண்ட ஆஸ்திரேலியா அணிக்கு இவருடைய கண்டிப்பான பாணி பிடிக்கவில்லை. கம்மின்ஸ் தலைமையிலான வீரர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வெளியேறினார்.

- Advertisement -

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சியாளர் ஆன்டி பிளவர் ஆர்சிபி அணிக்கு மாற, ஜஸ்டின் லாங்கர் லக்னோ அணிக்கு புதிய பயிற்சியாளராக இந்த ஆண்டு பொறுப்பேற்றார். மார்ச் மாத இறுதியில் தொடங்கிய ஐபிஎல் தொடரில் ஏப்ரல் மாதம் இறுதி வரை லக்னோ அணி சிறப்பாக விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு மிக அருகில் இருந்து, அடுத்த ஒரு மாதம் மோசமாக விளையாடி வெளியேறியது.

இந்த நிலையில் அவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ செய்திகள் வந்தது. ஆனால் அதற்கு விண்ணப்பிக்க ஜஸ்டின் லாங்கர் செய்யவில்லை. இதற்குப் பின்னணியில் கேஎல்.ராகுல் கூறிய முக்கிய அறிவுரை ஒன்று இருப்பதாக தற்பொழுது அவர் கூறியிருக்கிறார்.

இது குறித்து ஜஸ்டின் லாங்கர் கூறும் பொழுது “இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி அற்புதமான ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் நான் அதில் என்னை விலக்கி விட்டேன். நான் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு நான்கு வருடங்கள் இப்படியான பொறுப்பில் இருந்தேன். உண்மையில் தேசிய அணிக்கு பயிற்சி பயிற்சியாளராக இருப்பது சோர்வாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 6 ரன் தாண்டாத 8 பேர்.. தென் ஆப்பிரிக்கா அணி பரிதாபம்.. முதல் டி20-ல் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

இது குறித்து நான் கேஎல்.ராகுலிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் இது குறித்து கூறும் பொழுது ‘நீங்கள் ஐபிஎல் தொடரில் அழுத்தமும் அரசியலும் இருப்பதாக உணர்ந்தால், அதை ஆயிரம் மடங்கு பெருக்கிக் கொள்ளுங்கள், அந்த அளவிற்கு இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கும்பொழுது இருக்கும்’ என்று சொன்னார். எனக்கு அது மிகச் சிறந்த ஆலோசனையாக இருந்தது. ஆனால் அந்த வேலை ஒரு அற்புதமான ஒன்றாக இருந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.