6 ரன் தாண்டாத 8 பேர்.. தென் ஆப்பிரிக்கா அணி பரிதாபம்.. முதல் டி20-ல் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

0
3999

தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கிங்ஸ்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இப்போட்டியில் இரண்டு அணிகளிலும் சேர்த்து மொத்தம் மூன்று வீரர்கள் அறிமுக போட்டியில் இடம் பெற்றுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசிய சமார் ஜோசப் மற்றும் தென்னாப்பிரிக்க அணியில் ஓட்னில் பாட்மன் மற்றும் ரியான் ரிக்கல்ட்டன் ஆகியோர் புதிய வீரர்களாக தென்னாப்பிரிக்க அணில் இடம் பெற்றனர்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் பிராண்டன் கிங் சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் என 79 ரன்கள் விளாசினார். அவரைத் தொடர்ந்து மேயர்ஸ் 25 பந்துகளில் மூன்று சிக்சர்களுடன் 34 ரன்கள் விளாச, அதற்குப் பிறகு வந்த சேஸ் 30 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.

தென்னாப்பிரிக்க தரப்பில் சிறப்பாக பந்துவீசி அறிமுகவீரர் பாட்மன் நான்கு ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்கு அடுத்ததாக பெகுல்வாயோ நான்கு ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது. தென் ஆப்பிரிக்கா அணியில் மூத்த வீரரான டீ காக் இந்த போட்டியிலும் நான்கு ரன்களில் வெளியேற, சிறப்பாக விளையாடிய ஹென்ரிக்ஸ் 51 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என 87 ரன்கள் விளாசினார். ஆனால் அதற்குப் பிறகு யாரும் சிறப்பாக விளையாடாத காரணத்தினால் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

தென்னாபிரிக்க அணியின் கேப்டன் வாண்டர்டசன் 17 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே குவித்து வெளியேறினார். குறிப்பாக இந்த அணியில் எட்டு வீரர்கள் 6 ரன்களைத் தாண்டாமலும், நான்கு வீரர்கள் ஜீரோ ரன்னில் வெளியேறி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அறிமுக வீரரான சமாஜ் ஜோசப் மூன்று ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து தனது முதல் டி20 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேலும் மேத்யூ ஃபார் டே மூன்று விக்கெட்டுகளும், மாட்டி மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

இதையும் படிங்க:19 ரன்னுக்கு 5 விக்கெட்.. பங்களாதேஷை வீழ்த்தி அமெரிக்கா வரலாற்று வெற்றி.. தொடரையும் கைப்பற்றி சாதனை

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்க அணி அடுத்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும்.

- Advertisement -