இந்திய கிரிக்கெட்

முகுல் சவுத்ரி இந்த விஷயத்தில் விராட் மாதிரி.. ஆனா பேட்டிங்கில் ரசல் டேவிட் மாதிரி – ஜஸ்டின் லாங்கர் பேச்சு

தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடும் இந்திய உள்நாட்டு இளம் வீரர் முகுல் சவுத்ரி சிறந்த பினிஷராக எதிர்காலத்தில் உருவாவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாக்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நான்கு ஓவர்களுக்கு 54 ரன்கள் தேவைப்பட்ட பொழுது முகுல் சவுத்ரி தனி வீரராக இருந்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார்.

இவர்தான் சிபாரிசு செய்தார்

முகுல் சவுத்ரி குறித்து ஜஸ்டின் லாங்கர் பேசும் போது “சில மாதங்களுக்கு முன்பு பயிற்சி முகாமில் நாங்கள் அவரை பார்த்தோம். இவரை எப்படியாவது அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறிய எங்கள் அனலிஸ்ட் ஸ்ரீனிவாஸ்க்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அது எங்களுடைய அதிர்ஷ்டம்”

” அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் அவர் உண்மையான தடகள வீரர். அவர் விராட் கோலி போல வேகமாக ஓடக்கூடியவர். மேலும் ஆட்டம் குறித்தான அவரது அனுபவம் மிகப் பெரியது. 200 போட்டிகள் விளையாடியவர் போன்று அவருடைய பேச்சுகள் அமைந்திருக்கும். அவருக்கு நல்ல சக்தியும் அதே சமயத்தில் நல்ல அறிவும் இருப்பது சிறந்த கலவை”

- Advertisement -

இவர்களைப் போன்று வருவார்

“அவர் தற்போது கொஞ்சம்தான் கிரிக்கெட் விளையாடி உள்ளார். டிம் டேவிட் மற்றும் ரசல் போன்று போட்டிகளை வெற்றிகரமாக முடியும் திறமை அவரிடம் இருக்கிறது. ஆனால் இப்போது நான் அவர்களுடன் ஒப்பிட நினைக்கவில்லை. ஆனால் அவர் ஆட்டத்தை முடித்து வைப்பதற்கு பழகிவிட்டார். அவருக்கு தற்போது 22 வயதுதான் ஆகிறது. ஆனால் அவர் கண்களில் அந்தப் பார்வை இருக்கிறது”

இதையும் படிங்க: என் ஐபிஎல் ஆரம்பத்துல கேஎல் ராகுல் ஒரு அட்வைஸ் சொன்னார்.. ஆனா நான் அத செய்யாம மாட்டிக்கிட்டேன் – பிரிவிஸ் பேட்டி

“அவர் விளையாட்டு மீது பெரும் பசியுடன் இருக்கிறார். அவரது பெற்றோரும் குடும்பத்தினரும் அவரை நினைத்து மிகவும் பெருமைப்படுவார்கள். இந்த போட்டி அவருடைய தொழில் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts