பாபர் அசாமை புறக்கணித்த ஐசிசி.. இந்தியாவின் தலையில் விழுந்த பழி! – முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடும் சாடல்!

0
1204

ஐசிசி வெளியிட்ட இரண்டு நிமிட உலகக்கோப்பை புரோமோவில் பாபர் அசாம் இடம்பெறவில்லை என்பது பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் சிலரை கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதற்கு அவர்கள் என்னென்ன கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள் என்பதை பின்வருமாறு காண்போம்.

வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. போட்டிகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுவிட்டது. எட்டு அணிகள் தகுதி பெற்றதோடு, குவாலிபயர் சுற்றில் இருந்து நெதர்லாந்து மற்றும் இலங்கை இரண்டு அணிகளும் தேர்வாகியுள்ளன.

- Advertisement -

இந்த 50 ஓவர் உலகக்கோப்பையை பிரபலப்படுத்தும் விதமாக ஐசிசி தரப்பு சமூக வலைதளங்களில் இரண்டு நிமிடத்திற்கும் சற்று மிகுந்த ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டது. இதில் உலகக்கோப்பையை வென்ற மற்றும் உலகக்கோப்பையில் சாதித்த பல வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். இந்த வருடம் விளையாடும் முன்னணி நட்சத்திர வீரர்களும் அந்த புரோமோ வீடியோவில் இடம் பெற்றிருந்தனர்.

பாகிஸ்தான் அணியில் இருந்து நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சாஹின் அப்ரிடி மட்டுமே இடம்பெற்றிருந்தார். ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பாபர் அசாம் இடம்பெறவில்லை. இது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தரை கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து அவர் கருத்து தெரிவித்ததாவது:

“போட்டி இம்முறை இந்தியாவில் நடைபெறுகிறது என்பதற்காக முன்னணி பாகிஸ்தான் வீரர்கள் ஐசிசி ப்ரோமோவில் இடம்பெறாதது ஒரு தலைபட்சமானது. பிசிசிஐ தரப்பை மகிழ்விக்க ஐசிசி இப்படி நடந்து கொள்ளக் கூடாது.” என்று கடுமையாக சாடினார்.

- Advertisement -

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மற்றொரு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் பேசுகையில், “இந்த ப்ரோமோ வீடியோவில் பாபர் அசாம் இடம்பெறவில்லை என்பதற்காக நான் பேசவில்லை. ஆனால் அவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது. அவர்கள் கடுமையாக கோபம் அடைந்துள்ளார்கள்.

பாகிஸ்தானிலும் கிரிக்கெட்டிற்கு என்று எண்ணற்ற பல ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களையும் அரவணைத்து ஐசிசி செயல்பட்டிருக்க வேண்டும் மேலும் இந்த ப்ரோமோவில் 100 சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கர் இல்லை. இயான் செப்பல், எம்எஸ் தோனி, இம்ரான் கான் உள்ளிட்ட சில வெற்றிகரமான கேப்டன்களும் இடம்பெறவில்லை. இதையெல்லாம் எந்த வகையில் எடுத்துக் கொள்வது?. ஐசிசி கவனமாக கையாண்டிருக்க வேண்டும்.” என்று கடுமையாக சாடினார்.