இந்திய கிரிக்கெட்

இந்தியா 5வது டெஸ்ட்.. ஆஸி முக்கிய வீரர் திடீர் வெளியேற்றம்.. 2வது நாளில் நடந்த சோகம்.. வெளியான தகவல்கள்

இந்திய அணிக்கு எதிராக புத்தாண்டில் சிட்னியில் நடக்க இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அதிரடியாக ஆஸ்திரேலியா முக்கிய வீரர் ஒருவர் வெளியேறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் மிகவும் உச்சகட்ட பரபரப்பை எட்டிக் கொண்டிருக்கிறது. தற்போது நான்காவது டெஸ்ட் போட்டியை எந்த அணி வென்றாலும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முடிவிலேயே தொடரின் முடிவு தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள சாதகம்

இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஏற்கனவே வென்று கையில் வைத்திருக்கின்ற காரணத்தினால், இந்த நான்காவது போட்டியை வென்றாலே தொடர் சமநிலையில் முடியும் என்பதால், இந்த போட்டியை வென்றால் இந்திய அணி தொடரை தக்க வைத்து விடும். அல்லது அடுத்த போட்டியில் வென்றாலும் தொடரை தக்க வைத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வெல்ல வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இது அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அழுத்தமாகவும் மாறி இருக்கிறது. எனவே இந்திய அணி தற்பொழுது மனரீதியாக நம்பிக்கை பெறுவதற்கு நல்ல காரணிகள் இருக்கிறது.

- Advertisement -

முக்கிய வீரர் வெளியேற்றம்

இப்படியான நிலையில் அந்த அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஜோஸ் இங்லீஷ் காயம் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து திடீரென வெளியேறி இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் மாற்று வீரராக பீல்டிங் செய்ய போது காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கான்ஸ்டாஸ் அது உங்களை திருப்பிக் கடிக்க வரும்.. பும்ரா கிட்ட இது புதுசு – மைக் ஹஸி பேட்டி

இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவிக்கும் “ஜோஸ் இங்லீஷ் இடத்துக்கு இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு விரைவில் மாற்று வீரர் அறிவிக்கப்படுவார்” என்று கூறப்பட்டுள்ளது. ஜோஸ் இங்லீஷ் மாற்று விக்கெட் கீப்பராக மட்டுமில்லாமல் நல்ல அதிரடி பேட்ஸ்மேன் ஆகவும் ஆஸ்திரேலியா அணிக்கு இருந்திருப்பார். தற்போது அவரை முக்கியமான டெஸ்ட் போட்டியில் தவறவிடுவது அவர்களுக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது.

- Advertisement -
Published by
Tags: Josh inglish

Recent Posts