டெஸ்ட் தொடரிலிருந்து முன்னணி வீரர் விலகல்; கடைசி நேரத்தில் நேர்ந்த சோகம்!

0
1654

காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது என தகவல்கள் வந்திருக்கிறது.

இந்தியா வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் ஒன்பதாம் தேதி நடக்கவிருக்கிறது.

- Advertisement -

இதற்காக ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு வந்தடைந்து பெங்களூரில் பிரத்தியேகமான மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் இந்திய அணியும் கடந்த பிப்ரவரி 3-ம் தேதியிலிருந்து நாக்பூர் மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காயத்திலிருந்து மீண்டு வந்த ரவீந்திர ஜடேஜா மீண்டும் இந்திய அணிக்குள் திரும்பி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து ஒருநாள் தொடரில் விளையாட முடியாமல் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்கிற தகவல்கள் வந்திருக்கிறது. ஆகையால் அவரால் முதல் டெஸ்டில் விளையாட முடியாது எனவும் தெரியவந்திருக்கிறது.

மேலும் ஆஸ்திரேலியா அணியிலிருந்தும் முன்னணி வீரர்களின் காயம் குறித்து தகவல்கள் வந்திருக்கிறது. நெதன் லயன் மற்றும் மிட்ச்சல் ஸ்டார்க் இருவரும் முதல் டெஸ்டின் பிளேயிங் லெவனில் இருக்கமாட்டர் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஹேசல்வுட், இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் இருக்கிறார். முதல் டெஸ்ட் துவங்குவதற்குள் அவரால் குணமடைய இயலவில்லை. இரண்டாவது டெஸ்டிற்கும் அவர் சந்தேகம் தான் என்றும் தகவல்கள் வந்திருக்கிறது.

ஹேசல்வுட் மிதமான வேகத்தில் ஸ்விங் செய்யக்கூடிய அவர், சிறப்பான லைன் மற்றும் லென்தில் வீசக்கூடியவர். இந்திய மைதானங்கள் பற்றியும் அறிந்தவர். அவர் இல்லாதது சிக்கலை உண்டாகியுள்ளது.