நடப்பு ஐபிஎல் தொடரில் 14 வயதான வைபவ் சூரியவன்சி விளையாடிய விதத்தை பார்த்து தான் மிகவும் ஆச்சரியப்பட்டதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்து பல்வேறு உலக சாதனைகளை வைபவ் சூரியவன்சி படைத்தார். இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஜோஸ் பட்லர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
20 வயசு சின்னப் பையன்
இதுகுறித்து ஜோக் பட்லர் பேசும்பொழுது “அவர் விளையாடுவதை பார்க்க ஒரே நேரத்தில் ஊக்கம் மற்றும் உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. அவர் என்னைவிட வயதில் 20 வயது இளையவர். ஆனால் அவர் எங்களை மைதானம் முழுவதும் அடித்துக் கொண்டிருந்தார். அவர் அதன் மூலம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார். ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர் வயதில் இளையவராகவும் ஆண்டர்சன் வயதில் மூத்தவராகவும் இருந்தார்”
“எங்களுக்கு எதிராக அவர் சதம் அடிப்பதற்கு முன்பாக இரண்டு மூன்று போட்டிகளில் விளையாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன். மேலும் ஐபிஎல் தொடரில் எதிர்கொண்ட முதல் பந்தையே அவர் சிக்ஸருக்கு அடித்தார். மிகவும் திறமையானவர்கள் இப்படியான ஸ்டேட்மென்ட்டை கொடுக்க விரும்புகிறார்கள். அவர் முதல் பந்தில் சிக்சர் அடிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்திருக்கிறார். எங்களுக்கு எதிராகவும் அதையேதான் செய்தார்”
அந்த விஷயம் கொடூரமானது
“எங்களுக்கு எதிராக விளையாடிய பொழுது எங்கள் அணியில் பிரசித் கிருஷ்ணா முகமது சிராஜ் மற்றும் ரசித் கான் என தரமான சர்வதேச பவுலர்கள் இருந்தார்கள். அவர்களை சாதாரணமாக அடித்தார். அவர் அடித்த அந்த சிக்ஸர்கள் எதுவுமே சிறியது கிடையாது”
இதையும் படிங்க : வெறும் 60 ரன்.. மாஸ் காட்டும் சூப்பர் கிங்ஸ்.. பட்டைய கிளப்பும் பிளமிங்.. ஐபிஎல் தோல்விக்கு அமெரிக்காவில் பதில்
“மேலும் எங்களுக்கு எதிராக அவர் அடித்த சதம் கொடூரமானது. இதற்குப் பிறகு சிஎஸ்கே அணிக்கு எதிராக ஒரு அரைசதம் அடித்திருந்தார். அந்த அணியில் ஆர் அஸ்வின் மற்றும் ஜடேஜா போன்ற பெரிய பவுலர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களை வெகு சாதாரணமாக ஸ்டான்டில் தூக்கி சிக்ஸர் அடித்தார். நான் பார்த்ததிலேயே சிறந்த வீரர் இவர் என்று நினைக்கிறேன். அவர் விளையாடுவதை பார்த்து பிரமித்து போனேன். அவருக்கு அற்புதமான பேட் ஸ்விங் இருக்கிறது. அது லாரா மற்றும் யுவராஜ் சிங் போன்ற பெரிய வீரர்களுக்கு இருந்ததைப் போல இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






