வெறும் 60 ரன்.. மாஸ் காட்டும் சூப்பர் கிங்ஸ்.. பட்டைய கிளப்பும் பிளமிங்.. ஐபிஎல் தோல்விக்கு அமெரிக்காவில் பதில்

0
228
TSK

தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் எம்எல்சி டி20 லீக்கில் சீட்டில் ஆர்கஸ் அணியை 60 ரன்னில் சுருட்டி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 93 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.

நடப்பு எம்எல்சி டி20 தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி இதுவரையில் விளையாடி இருக்கும் மூன்று போட்டிகளையும் வெற்றி பெற்று அசத்து இருக்கிறது. இந்த முறை பேட்டிங் சுமாராக இருந்தாலும் பந்து வீச்சில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

- Advertisement -

மெதுவான ஆட்டம்

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த டெக்ஸா சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வே 17 பந்தில் 13 ரன், கேப்டன் பாப் டு பிளேசிஸ் 12 பந்தில் 7 ரன் எடுத்து மிகவும் சுமாரான துவக்கத்தையே தந்தார்கள்.

இதைத்தொடர்ந்து சாய்தேஜா 23 பந்தில் 30 ரன், டேரில் மிட்சல் 26 பந்தில் 25 ரன், ஸ்டோய்னிஸ் 12 பந்தில் 28 ரன் எடுத்தார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் ஜஸ்தீப் சிங் மற்றும் ஹர்மித் சிங் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

சூப்பர் கிங்ஸ் கலக்கல் பவுலிங்

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சீட்டில் ஆர்கஸ் அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் 9, கைல் மேயர்ஸ் 0, மேலும் முக்கிய ஆட்டக்காரர்கள் ஹென்றி கிளாசன் 0, சிக்கந்தர் ராசா 4 ரன் என அடுத்தடுத்து ஆட்டம் இழக்க அந்த அணி 60 ரன் மட்டுமே எடுத்து சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : 1.5 பில்லியன் மக்களை எப்படி சமாளிக்கிறீங்க.. கோலியின் இந்த அறிவுரைதான் எனக்கு பெரிய மாற்றம் கொடுத்தது – ஜாஸ் பட்லர்

இந்த போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் ஜியா உல் ஹக், நன்ரே பர்கர் மற்றும் நூர் அகமத் மூவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள். ஐபிஎல் தொடரில் அடைந்த படுதோல்விகளுக்கு அமெரிக்காவில் சூப்பர் கிங்ஸ் அணி பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது. மேலும் சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் இந்த போட்டியின் போது மிகுந்த உற்சாகத்தில் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -