இவர் இந்தியாவிற்காக மூன்று ஃபார்மட் கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்த வீரராக வருவார் – ஜோஸ் பட்லர் நம்பிக்கை

0
4261
Jos Buttler

2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசன் மெல்ல மெல்ல அதன் தீவிரமான சுவாரசியத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. ஏலத்தின் பொழுது பலகீனமாகக் கணிக்கப்பட்டு ப்ளேஆப்ஸ்க்கு வாய்ப்பில்லாத அணிகளாக கருதப்பட்டதில் குஜராத்தும், ராஜஸ்தானும் முக்கிய அணிகள்.

ஆனால் குஜராத் தன் இரு ஆட்டங்களில் லக்னோ, டெல்லி என பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி இருக்கிறது. ராஜஸ்தான் அணி தன் இரு ஆட்டங்களிலும் பனிப்பொழிவைத் தாண்டி, இரண்டாவதாகப் பந்துவீசி ஹைதராபாத், மும்பை அணிகளை வென்றிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ராஜஸ்தான் அணி நாளை பெங்களூர் அணியைச் சந்திக்கும் போட்டி பற்றியான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் ராஜஸ்தான் அணியின் முன்னணி வீரரும், விக்கெட் கீப்பிங் ஓபனிங் பேட்ஸ்மேனுமான, கடந்த ஆட்டத்தில் மும்பையுடன் சதம் அடித்திருந்த ஜோஸ் பட்லர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் அவர் “வலைப்பயிற்சியில் அதிகப்படியான வேகத்தையும், திறமையையும் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் பார்க்க முடிகிறது. இந்திய அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கக்கூடிய வீரராக அவர் இருப்பார். இந்திய அணிக்காக சிவப்புப்பந்து போட்டிளில் அவரைச் சீக்கிரம் காண்பதற்கு வாய்ப்புள்ளது” என்றார்.

மேலும் கேப்டன் சஞ்சு சாம்சன் பற்றி அவர் கூறுகையில் “அவரின் ஆட்டம் முதிர்ந்திருக்கிறது. அவரின் மொத்த கிரிக்கெட்டும் முதிர்ந்திருக்கிறது. அவர் அறிவானவர், அவர் தலைமையின் கீழ் நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடுகிறோம். அவர் ஜாலியான மனிதர், எங்களின் ஒட்டுமொத்த குழுவின் மரியாதைக்குரியவர்” என்று புகழ்ந்து பேசினார்.

- Advertisement -