ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவிக்கு இவர் சரியான தேர்வாக இருப்பார் – முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விருப்பம்

0
135
Michael Vaughan

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இதன் மூலமாக கடந்த 14 வருடங்களில் கோப்பையை வெல்லாத அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி திகழ்ந்து வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடருடன் இனி பெங்களூர் அணிக்கு தான் கேப்டனாக நீடிக்க போவதில்லை என்று முன்னரே அறிவித்து இருந்தார். கடந்த 9 வருடங்களாக விராட் கோலி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தலைமை தாங்கி வந்து இருக்கிறார். அவரது தலைமையில் 2016-ம் ஆண்டு பெங்களூர் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி, ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அடுத்த வருடம் புதிய கேப்டன் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களம் இறங்கும்.அதே நேரத்தில் ஒரு வீரராக எப்பொழுதும் பெங்களூரு அணியில் நான் விளையாடிக் கொண்டே இருப்பேன் என்று விராட் கோலி நம்பிக்கை தெரிவித்திருந்தார். பெங்களூரு அணி ரசிகர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு, புதிய கேப்டனாக எந்த வீரர் வர போகிறார் என்கிற ஆர்வத்தில் தற்பொழுது இருக்கின்றனர்.

பெங்களூரு அணியின் கேப்டன் பதவிக்கு இவர் சரியான முடிவாக இருப்பார்

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஜோஸ் பட்லர் விளையாட வேண்டும் என்றும், அதேசமயம் அந்த அணிக்கு அவர் கேப்டனாக செயல்பட வேண்டும் என்றும் தன்னுடைய விருப்பத்தை தற்போது கூறியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி சென்னை அணியை சிறப்பாக வழி நடத்துவதை போல பெங்களூரு அணியை சிறப்பாக வழிநடத்தக் கூடிய அனைத்து திறமையும் அவரிடம் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தற்போது விளையாடி வரும் அவர் அடுத்த ஆண்டு மீண்டும் அதே அணி மூலமாக தக்கவைக்கப்படுவாரா என்பது பற்றி உறுதியாக கூற முடியாது. ஒருவேளை அந்த அணி அவரை தக்க வைத்துக் கொள்ளவில்லை என்றால், ஜோஸ் பட்லர் பெங்களூர் அணிக்கு சென்றால் நன்றாக இருக்கும். அங்கே விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக செயல்பட்டு, அணியையும் அவர் தலைமை தாங்க வேண்டும் என்றும் மைக்கேல் வாகன் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தற்பொழுது உள்ள இங்கிலாந்து அணிக்கு லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் துணை கேப்டனாக ஜோஸ் பட்லர் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளில் பொருத்தவரையில் ஜோஸ் பட்லர் பற்றி எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை. ஐபிஎல் தொடரில் 150 ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளையாடக்கூடிய அதிரடி ஆட்டக்காரர். எனவே நிச்சயமாக பெங்களூரு அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் ஜோஸ் பட்லர் இருப்பார்.

இருப்பினும் அவர் பெங்களூரு அணியில் அடுத்த ஆண்டு இடம் பெறுவாரா அல்லது இடம்பெற மாட்டாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.