2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சரை கைப்பற்றியது. 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடினார். கடந்த ஆண்டு காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவர் பங்கு கொள்ளவில்லை.
ஐபிஎல் தொடரில் இதுவரை 35 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 46 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் இவருடைய பௌலிங் ஆவெரேஜ் 21.33 மற்றும் எக்கானமி 7.13 ஆகும். பேட்டிங்கிலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 157.26 ஆகும்.
2020 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தொடரை முடித்தாலும், தன்னுடைய மிக சிறப்பான பந்துவீச்சில் மூலமாக அந்த ஆண்டின் “மதிப்பு மிக்க வீரர்” விருதை கைப்பற்றினார்.
இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் களமிறங்க இருக்கும் ஆர்ச்சர்
காயத்தில் இருந்து படிப்படியாக குணமாகி கொண்டிருக்கும் அவர் இன்னும் சில மாத காலம் ஓய்வு எடுத்துக் கொள்வார் என்று இதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் பங்கு கொள்ளப் போவதில்லை என்றும் உறுதியானது.
இருப்பினும் அவர் தன்னுடைய பெயரை இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் இணைத்துள்ளார். அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய் வீரர்கள் பட்டியலில் தன்னுடைய பெயரை அவர் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமாக பேசி உள்ள இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அவர் இந்த ஆண்டு விளையாட வில்லை என்றாலும், நிச்சயமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ( 2023 மட்டும் 2024 ) ஐபிஎல் தொடரில் எப்பொழுதும் போல களமிறங்கிய விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு அவரை கைப்பற்றுவதன் மூலமாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனைத்து அணியும் மெகா ஏலத்தில் யோசனை செய்ய வாய்ப்பு உள்ளது. நல்ல பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக விளையாடக் கூடிய அவர் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போக அதிக வாய்ப்பு உள்ளது என நாம் எதிர்பார்க்கலாம்.