மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து அன்றே கருத்துச் சொன்ன ஜோஃப்ரா ஆர்ச்சர் – வைரலாகி வரும் அவரது ட்விட்டர் பதிவுகள்

0
1041
Jasprit Bumrah and Jofra Archer

கடந்த இரண்டு ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டிரென்ட் போல்ட் ஜோடி பந்துவீச்சில் மற்ற அணிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி டிரென்ட் போல்ட்டை தக்கவைத்துக் கொள்ள வில்லை. மெகா ஏலத்தில் அவரை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்காத நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 கோடி ரூபாய்க்கு அவரை கைப்பற்றியது.

டிரென்ட் போல்ட் இடத்தை நிரப்ப மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அதிரடியாக யோசித்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் 8 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. இதற்கு முன் ஜோஃப்ரா ஆர்ச்சர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய டிரென்ட் போல்ட் ராஜஸ்தான் அணியிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர் மும்பை அணியில் விளையாட போகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் குறித்து முன்பே ட்விட்டரில் பதிவு செய்த ஜோஃப்ராஆர்ச்சர்

2014ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி மும்பை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் லீக் போட்டியில் மோதின. போட்டி நடைபெறுவதற்கு முன்பாக ஜோஃப்ரா ஆர்ச்சர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசுவதை நான் வெறுக்கிறேன், அவரது பந்துவீச்சை பார்க்கவும் தனது வெறுப்பாக உள்ளது போல” அவர் பதிவு செய்திருந்தார். எதிரணிகளுக்கு தலைவலியாக இருந்த ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை அவர் அவ்வாறு ஒப்பிட்டு பதிவு செய்திருந்தார்.

அவர் பதிவு செய்த பின்னர் நடந்து முடிந்த போட்டியில் மும்பை அணி 25 ரன்களில் வெற்றி பெற்றது. அதேபோல அந்த போட்டியில் மூன்று ஓவர்கள் வீசி ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் எதுவும் கைப்பற்றாமல் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதேபோல 2014 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணி கொடுத்து மற்றொரு பதிவை பதிவு செய்திருக்கிறார்.”மும்பை இந்தியன்ஸ் அணி அதற்கு தகுதியான அணி”, என்று அவர் பதிவு செய்திருந்தார்.

அந்தப் பதிவை தற்போது மேற்கோள்காட்டி ஆமாம் உங்களை கைப்பற்ற மும்பை இந்தியன்ஸ் அணி தகுதியான அணி தான் என்று ரசிகர்கள் தற்போது கூறி வருகின்றனர். அந்த பதிவை மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரபூர்வ பக்கமும் மேற்கோள் காட்டி “ஆமாம் நாங்கள் தகுதியானவர்கள்தான், அது எங்களுக்கு தெரியும்”என்று பதிலுக்கு பதிவு செய்துள்ளனர்.

காயத்திலிருந்து மீண்டு வந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் தற்பொழுது மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாடுவதற்காக தன்னுடைய உடலை தயார் படுத்திக் கொண்டு வருகிறார். தீவிர வளையப்பயிற்சி தளத்தில் இருக்கும் அவர், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை என்று முன்பே அறிவித்து இருந்தார். இருப்பினும் அடுத்த ஆண்டு முதல் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் களமிறங்கி விளையாடுவார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.