கில் தேவையில்லாம பிரச்சனை பண்றாரு.. திறமை இருந்தா போய் இதை செய்ங்க – ஜோ ரூட் கோபம்

0
649
Root

இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்தை மாற்றுவது தொடர்பாக தேவையில்லாமல் களத்தில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதாக இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் விமர்சனம் செய்திருக்கிறார்.

தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகள் டியூக்ஸ் பந்தையும், இந்தியா எஸ்ஜி பந்தையும், ஆஸ்திரேலியா இலங்கை போன்ற நாடுகள் கூக்கபுரா பந்தையும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இங்கிலாந்தின் தற்போது பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்து பெரிய சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

வெறும் 10.3 ஓவர்

நேற்று இந்திய அணி இரண்டாவது புதிய பந்தை வாங்கி 10. 3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி இருந்தது. இந்த குறுகிய நேரத்திலேயே புதிய பந்து சேதம் அடைந்து விட்டது. இதன் காரணமாக மாற்றுப் பந்து வழங்கப்பட்டது. இந்த பந்து மிகவும் பழையதாக இருந்ததாக கேப்டன் கில் நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.

மேலும் இந்த இரண்டு பந்தையும் மாற்றிய பொழுது களத்தில் நேரம் வீணாகி கொண்டு இருந்தது. அதே சமயத்தில் இந்திய தரப்பு நடுவர்கள் எடுத்த முடிவில் திருப்தி அடையவில்லை. இரண்டாவது புதிய பந்தில் பும்ரா 14 பந்துகள் வீசி 3 விக்கெட் கைப்பற்றினார். ஆனால் அந்தப் பந்து சேதம் அடைந்து அதற்கு மாற்றாக கொடுக்கப்பட்ட பந்தில் இந்திய அணியால் எதையும் செய்ய முடியவில்லை.

- Advertisement -

ஜோ ரூட் விமர்சனம்

இதுகுறித்து ஜோ ரூட் பேசும்பொழுது “ஒரு போட்டியில் பந்தை மாற்ற வேண்டும் என்றால் 80 ஓவர்களுக்கு மூன்று முறை வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன். அதே நேரத்தில் பந்தின் வளையம் சரியாக இருக்க வேண்டும் பெரியதாக மாறிவிடக்கூடாது. இது போன்று சில நேரங்களில் நடக்க செய்யும். ஆனால் நீங்கள் தொடர்ந்து பந்தை மாற்ற கேட்டு களத்தில் நேரத்தை வீணடிக்க கூடாது”

இதையும் படிங்க : சச்சினுக்கும் அந்த பிரச்சனையை கொடுத்தாங்க.. இப்ப எனக்கும் தராங்க.. இது தீராதா? – பும்ரா பேச்சு

“பந்தின் வடிவம் மாறினால், அதற்காக நீங்கள் பந்தை மாற்றிக் கொண்டால் எதுவும் இங்கு பெரிதாக மாறிவிடாது. மேலும் நீங்கள் இப்படியான மாற்றங்கள் எப்படி இருந்தாலும் அதற்கு தகுந்தது போல மாறிக்கொள்ள வேண்டும். ஒரு பந்தில் நல்ல நகர்வு இருந்தாலும், நகர்வு இல்லை என்றாலும் நீங்கள்தான் திறமையாக எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -