இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பும்ரா ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி பல சாதனை படைத்தார். மேலும் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் சில முக்கிய விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடவில்லை. அந்த போட்டியில் இந்திய அணி வெற்றியும் பெற்றது. மேலும் அவர் விளையாடாதது குறித்து பல விமர்சனங்கள் வெளியில் இருந்து வர ஆரம்பித்தது. உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக இருந்த பொழுதும் விமர்சனங்கள் நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது முடிவுக்கு வராது
இதுகுறித்து நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய பும்ரா கூறும்பொழுது ” லார்ட்ஸ் ஹானர் போர்டில் இருப்பது நல்ல விஷயம். ஆனால் என் குறித்தான விவாதங்கள் தொடர்ந்து இங்கு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். எங்களை சுற்றி எப்பொழுதும் கேமராக்கள் இருக்கின்றன. நாங்கள் பயிற்சி செய்யும் போது கூட கேமராக்கள் இருக்கின்றன”
“இது பார்வையாளர்களின் சகாப்தமாக இருந்து வருகிறது. மேலும் மீடியாக்களும் விளம்பரத்தை அதிகரித்து பரபரப்பை உருவாக்க பார்க்கிறார்கள். எனவே இப்படியான விமர்சனங்கள் போன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கப் போகிறது. இதுவெல்லாம் என் கைகளில் கிடையாது”
சச்சின் சாருக்கும் நடந்தது
“குறைந்தபட்சம் நான் சிறப்பான முறையில் செயல்படுகின்ற காரணத்தினால் பார்வையாளர்கள் எனக்கு ஆசீர்வாதங்களை தருவார்கள். ஆனால் இருந்த போதும் நான் இதைப் பற்றி எல்லாம் எதையும் கவலைப்படுவது கிடையாது. நீங்கள் இந்த ஜெர்சியை அணிந்து விளையாடும் வரையில் நீங்கள் ஜட்ஜ் செய்யப்பட்டு கொண்டே இருப்பீர்கள்”
இதையும் படிங்க : பும்ராக்கு இதுல விருப்பமே இல்ல.. சிராஜ்னால கேப்டன் கில் தேவையே இல்லாம செஞ்சாரு – தினேஷ் கார்த்திக்
“நான் தொலைக்காட்சியில் தெரியும் வரையில் தீர்ப்புகள் எழுதப்பட்டு கொண்டே இருக்கும். இது தொழில்முறை விளையாட்டு வாழ்க்கையில் ஒரு பகுதியாகும். உங்கள் அப்போதைய செயல் திறனை வைத்து நீங்கள் எப்பொழுதும் மதிப்பிடப்பட்டு கொண்டே இருப்பீர்கள். சச்சின் சார் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். ஆனாலும் அவர் குறித்து எல்லோரும் ஜட்ஜ் செய்து கொண்டே தான் இருந்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.






