இந்திய அணி சூரியகுமார் யாதவ் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை அணிக்கு எதிராக மொத்தமாகக் கைப்பற்றியது. இந்த நிலையில் நடைபெற்ற அணி கூட்டத்தில் ஹர்திக் பாண்டியா அணியினரை பாராட்டி பேசியிருக்கிறார்.
இந்தத் தொடர் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்தது. காரணம் டி20 கிரிக்கெட்டுக்கு சூரியகுமார் யாதவ் புதிய கேப்டனாக வந்தார். மேலும் தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கு இது முதல் தொடராக அமைந்தது. மேலும் ஹர்திக் பாண்டியா ஒட்டுமொத்தமாக கேப்டன் பொறுப்புக்கான போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும் ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்கள். இந்த நிலையில் நடைபெற்ற டி20 தொடர் என்கின்ற காரணத்தினால், புதிய வழிகாட்டுதலில் புதிய டி20 இந்திய அணி எவ்வாறு செயல்படும்? என்கின்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது.
நேற்றைய வெற்றிக்குப் பிறகு அணிக் கூட்டத்தில் பேசி இருந்த கம்பீர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் வீட்டிற்கு செல்லும் வீரர்கள் உடல் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அப்படியே திரும்பி அணிக்குள் வந்து விட முடியாது எனவும் எச்சரிக்கை செய்திருந்தார். மேலும் தான் பேசி முடித்த பிறகு ஹர்திக் பாண்டியாவை பேச அழைத்தார்.
இந்த அணிக் கூட்டத்தில் ஹர்திக் பாண்டியா பேசும் பொழுது ” நம் பேட்டிங்கில் சிறந்த சவாலை கொடுத்தோம். அடுத்து மிக முக்கியமான நேரத்தில் கில் மற்றும் ரியான் பராக் இருவரும் அமைத்த பார்ட்னர்ஷிப் நாம் வலிமையான அடித்தளத்தை பெற உதவியது. சூழ்நிலை விழிப்புணர்வு பற்றி பேசும்பொழுது இவர்கள் இருவரும் செய்தது சிறப்பானது. நான் எப்பொழுதும் பேட்டிங்கில் கீழ் வரிசையில் செயல்படுவதை விரும்புகிறேன். ரவி பிஸ்னாய் எடுத்த எட்டு ரன்கள் மற்றும் வாஷிங்டன் சுந்தர் கடைசியில் விளையாடிய விதம் அருமையானது.
இதையும் படிங்க : எல்லாம் டி20 உலக கோப்பையில் ஆரம்பிச்சது.. நாங்க இனி அந்த தப்பை மட்டும் செய்ய மாட்டோம் – சூரியகுமார் யாதவ் பேச்சு
கம்பீர் பாய் கூறியது போல சூர்யா நீங்கள் பந்துவீச்சாளர்களை ரொட்டேட் செய்தது மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக கடைசி இரண்டு ஓவர்களில் நீங்கள் செயல்பட்ட விதம் எல்லோருக்கும் மிகவும் நம்பிக்கையை கொடுத்தது. ஒரு பவுலிங் யூனிட்டாக சிறப்பாக விளையாடினோம். இப்படியான கேம்களை வெல்லும் பொழுது நாம் படிப்படியாக முன்னேறி செல்வோம்.அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட இருக்கும் தோழர்களே அதை விட்டு விடாதிர்கள். அதையும் இதே போல் முடித்து விடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.






