இங்கிலாந்து அணி சொந்த நாட்டில் நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் நேற்று வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.
இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த நாட்டில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக இங்கிலாந்து அணி கைப்பற்றியது. தொடர் வெற்றிகளின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து இங்கிலாந்து மேலே முன்னேறி வந்து கொண்டிருக்கிறது.
இந்திய அணியிடம் சிக்கிய இங்கிலாந்து
இந்த வருட ஆரம்பத்தில் இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்தது. இதன் முதல் போட்டியில் அதிரடியாக வென்று நம்பிக்கை உடன் தொடரை ஆரம்பித்தது.
இப்படியான நிலையில் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகளையும் ரோகித் சர்மா தலைமையிலான இளம் இந்திய அணி வென்று இங்கிலாந்து அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பெரிய சரிவை உண்டாக்கி விட்டது. மேலும் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாடும் பாஸ்பால் முறையும் பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது.
மாறிய பாஸ்பால்
இப்படியான நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அதிரடியாக விளையாடுவதை கைவிட்டு, சூழ்நிலைக்கு ஏற்றது போல் விளையாடும் முறைக்கு தன்னை மாற்றிக் கொண்டார். இதன் பிறகு இங்கிலாந்து அணிக்கு வெற்றி எந்தவித கடினமும் இல்லாமல் வந்து கொண்டிருக்கிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் மூன்று இடங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தொடர்கின்றன. இந்த நிலையில் இங்கிலாந்து அணி அதிரடியாக தென் ஆப்பிரிக்கா அணியை கீழே இறக்கி நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மேலும் பாகிஸ்தான் அணி தற்போது ஏழாவது இடத்திற்கு சரிக்கப்பட்டிருக்கிறது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக உள்நாட்டில் நடக்கும் போட்டி ஆனால் இன்னும் கூட சரிவு வரலாம்.
இதையும் படிங்க : நாடு நமக்கு என்ன கொடுக்கல.. வெளிநாட்டு பாஸ்போர்ட் இருக்குனு இந்த மாதிரி செய்யாதீங்க – பாக் கோச் மீது பாசித் அலி வருத்தம்
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்
இந்தியா – 68.52
ஆஸ்திரேலியா – 62.50
நியூசிலாந்து – 50.00
இங்கிலாந்து – 41.07
இலங்கை – 40.00
சவுத் ஆப்பிரிக்கா – 38.89
பாகிஸ்தான் – 36.66
பங்களாதேஷ் – 25. 00
வெஸ்ட் இண்டீஸ் – 18.52