சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்ய வாய்ப்புக் கிடைத்தும் அதை தவறவிட்ட ஜோ ரூட்

0
378
Sachin Tendulkar and Joe Root

இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தொடர் 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டது. முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்த உடனேயே பல ரசிகர்களுக்கு அது ஆச்சரியத்தை கொடுத்தது. அதுவும் அல்லாமல் இங்கிலாந்து அந்த அணி தங்களுடைய மிகச் சிறந்த இரண்டு வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் மற்றும் பிராட் என இருவரையுமே அணியில் சேர்க்காமல் களம் கண்டது.

முதலில் பேட்டி எடுத்த இங்கிலாந்து அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் சிறப்பாக பந்துவீசி நெருக்கடியை கொடுத்தார். அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. உன் பேரு பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் மற்றும் லபுஷேன் இணைந்து சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதனை தொடர்ந்து விளையாடிய அந்த அணியின் வீரர் ஹெட் சிறப்பாக விளையாடி சதம் கடந்தார். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 425 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி இந்த முறை சற்று கவனமுடன் ஆடியது. இரண்டு துவக்க வீரர் களை விரைவாக இழந்தாலும் அந்த அணியின் கேப்டன் ரூட் மற்றும் மாலன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதுவரை ஆஸ்திரேலிய நாட்டில் ஒரு முறை கூட சதம் அடிக்க இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இந்த முறையும் கடப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் எண்பத்தி ஒன்பது ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மாலன் எண்பத்தி இரண்டு ரன்களுக்கு ஆட்டம் இழக்க இங்கிலாந்து அணி அதன் பின்பு வரிசையாக சரிந்தது. 297 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெறும் 20 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு டார்கெட்டாக வைத்தது. ஆஸ்திரேலிய அணி அதை எளிதாக அடித்து முதல் டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது.

இந்த ஆண்டு துவக்கம் முதலே சிறப்பாக விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்த முறையும் 89 ரன்கள் எடுத்தார். ஏற்கனவே இந்த ஆண்டு 6 சதங்கள் அடித்துள்ள ரூட் மற்றும் ஒரு சதம் அடித்தால் ஒரே வருடத்தில் 7 சதங்களை அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைப்பார். ரிச்சர்ட்ஸ், டெண்டுல்கர், பாண்டிங், டீ சில்வா, யூசுஃப் ஆகியோர் மட்டுமே இதுவரை இந்த சாதனையை படைத்துள்ளனர். மற்றுமொரு சதமடித்து இந்தப் பட்டியலில் ஜோ ரூட் இணைவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்