இது பாஸ்பால் இல்ல பிராங்க் பால்.. இந்தியா இதுல எச்சரிக்கையா இல்லனா மாட்டிக்கும் – அஸ்வின் கருத்து

0
144
Ashwin

தற்போது இங்கிலாந்து அணி பாஸ்பால் விளையாடவில்லை என்றும் பிராங்க் பால் விளையாடி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வழக்கத்திற்கு மாறாக மிகவும் பொறுமையாக விளையாடப்படுகிறது. முதல் நாளில் 250 ரன்கள் தாண்டி மட்டுமே கிடைத்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கிலாந்து அணி குறைந்தபட்சம் 300 ரன்கள் மேல் அதிரடியாக எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மாற்றிய ஜோ ரூட்

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் மிகவும் புத்திசாலித்தனமான முறையில் விளையாடி முன்னிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். ஆடுகளத்தில் மாறுபட்ட பவுன்ஸ் மற்றும் வேகம் இருந்ததால் மிகவும் பொறுமையாக விளையாடினார்.

அதே சமயத்தில் தன்னுடைய விக்கெட்டை கொடுப்பதற்கு எந்த இடத்திலும் வாய்ப்பை தரவில்லை. மேலும் முதல் நாள் முடிவில் சிறப்பாக விளையாடி 99 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று கொண்டிருக்கிறார். இன்று இங்கிலாந்து அணி மேற்கொண்டு 150 ரன்கள் எடுத்தால் கடினமான ஆடுகளத்தில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தேவையான ரன்களை எடுத்து விடும்.

- Advertisement -

இந்திய அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “தற்போது இங்கிலாந்து அணி பாஸ் பால் விளையாடவில்லை. பிராங்க் பால் விளையாடி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. ரூட் தான் எவ்வளவு சிறப்பான பேட்ஸ்மேன் என்பதை காட்டிவிட்டார். மேலும் இந்த லார்ட்ஸ் ஆடுகளம் இந்திய ஆடுகளம் போல் இருக்கிறது. முதல் நாளிலேயே மாறுபட்ட பவுன்ஸ் காணப்படுகிறது. ஜடேஜா பந்து தாழ்வாக வருகிறது”

இதையும் படிங்க : நாடுதான் முக்கியம்.. விராட் கோலி பேச்சுக்கு எதிராக கம்பீர் பேச்சு.. மீண்டும் பரபரப்பான இந்திய கிரிக்கெட்

“மேலும் இந்திய அணி இங்கிலாந்து அணியை 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி விட வேண்டும். இங்கிலாந்து அணி தொடர்ந்து இந்த ஆடுகளத்தில் விளையாடினால் இந்திய அணி விளையாடும் பொழுது ஆடுகளம் மோசமாக மாறிவிடும். எனவே இந்திய அணி சீக்கிரத்தில் இங்கிலாந்து அணியை ஆல் அவுட் செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -