ஆஸி மண்ணில் ஜோ ரூட் மோசமான சாதனை.. இந்திய வீரரை பின்னுக்கு தள்ளி சோகம்.. கலக்கும் பவுலர்கள்

0
51
Root

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆசஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் மோசமான சாதனை படைத்திருக்கிறார்.

இந்த முறை ஐந்து போட்டிகள் கொண்ட ஆசஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகள் வேகமாக சரிந்து கொண்டிருக்கிறது. இதுவரையில் மட்டுமே இரண்டாவது நாள் முடிவதற்குள்ளாகவே 26 விக்கெட்டுகள் சரிந்திருக்கின்றன.

- Advertisement -

ஜோ ரூட் சோகம்

ஆஸ்திரேலிய மண்ணில் எந்த கிரிக்கெட் வடிவத்திலும் இதுவரையில் ஜோ ரூட் சதம் அடித்தது கிடையாது. இந்த முறையும் அந்த சோகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்து வீச்சில் ஜோ ரூட் ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் அணிக்கு ஏதாவது நல்ல பங்களிப்பு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறையும் 11 பந்தில் 8 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் ஸ்டார்க் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

ஜோ ரூட் மோசமான சாதனை

இதன் மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் அந்த அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி சதம் அடிக்காத டாப் 7 பேட்ஸ்மேனாக ஜோ ரூட் மோசமான சாதனை படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் ஜோ ரூட்டுக்கு ஆஸ்திரேலிய மண் எப்பொழுதும் பெரிய சோதனையாக இருந்து வருவது தொடர்கிறது.

இதையும் படிங்க: 2வது டெஸ்ட்.. கம்பீர் மீண்டும் செய்த தப்பு.. இது கூட தெரியாதா? – கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சனம்

டெஸ்ட் சதம் இல்லாமல் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக இன்னிங்ஸ்கள் (டாப் 7 இல் பேட்டிங் செய்யும்போது)

29- ஜோ ரூட் (இங்)* 28- டி வெங்சர்க்கார் (இந்தியா)
27 – டாம் ஹேவர்ட் (இங்)
25- ஆலன் லாம்ப் (இங்)
23- ஜிம்மி ஆடம்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்)
22 – ட்ரெவர் பெய்லி (இங்)
21 – பில்லி பேட்ஸ் (இங்)
21-எஸ் சந்தர்பால் ( வெஸ்ட் இண்டீஸ்)
20- மைக் பிரேர்லி (இங்)
20 – நசீர் உசேன் (இங்)
19- டிக் பார்லோ (இங்)
19- ஜெஃப் மில்லர் ( இங்)
19- ரோஹித் சர்மா (இந்தியா)
19-ஜானி டைல்டெஸ்லி (இங்.)
19- ஜான் ரைட் (நியூசிலாந்து)

- Advertisement -