இன்று இந்தியா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி அசாம் கவுகாத்தி மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டிக்கு மீண்டும் கம்பீர் தன்னுடைய பாணியில் தவறான அணியை களம் இறக்கி இருக்கிறார்கள் என கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை இந்திய அணி தோற்றுவிட்டது. எனவே இரண்டாவது போட்டியை பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்கின்ற நெருக்கடியில் இருக்கிறது. இல்லையென்றால் கம்பீர் தலைமையில் சொந்த மண்ணில் தோற்கும் இரண்டாவது டெஸ்ட் தொடராக அமையும்.
விராட் கோலிக்கு இயல்பாக அமைந்தது
விராட் கோலி இந்திய டெஸ்ட் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா என இரண்டு விரல் ஸ்பின்னர்களை மட்டுமே அணியில் வைத்துக் கொண்டார். இவர்கள் இருவருமே பேட்டிங் செய்வார்கள் என்பதால் பேட்டிங் நீளம் எட்டு வரை இருந்தது.
இதன் காரணமாக விராட் கோலி மூன்று முழுமையான வேகப் பந்துவீச்சாளர்களை விளையாட வைத்தார். இது சொந்த மண்ணில் இந்திய அணி வேகம் மற்றும் சுழல் என எந்த ஆடுகளம் கிடைத்தாலும் சிறப்பாக செயல்பட உதவியது. தற்போது கம்பீர் அணிக்கும் இது இருந்தாலும் அவர் அதை சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை என்று விமர்சிக்கப்படுகிறது.
இந்த வீரர் தேவையா?
தற்போது நிதீஷ் குமார் ரெட்டியை இந்த போட்டிக்கு எட்டாவது இடத்தில் தேர்வு செய்து இருக்கிறார்கள். இன்று முதல் நாளில் பும்ரா மற்றும் சிராஜ் பந்து வீசி முடித்ததும் நிதீஷ் குமார் ரெட்டி பந்துவீச்சுக்கு வந்தார். அதுவரையில் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் மேல் இருந்த அழுத்தத்தை அவரது சாதாரண பந்துவீச்சு எடுத்து விட்டது. அவர் முழுமையான டெஸ்ட் பேட்ஸ்மேன் அல்லது சிறந்த பவுலர் என இரண்டுமே கிடையாது.
இதையும் படிங்க : தன்னை சிறந்த கேப்டன்னு நிருபிக்க ரிஷப் பண்ட் முதல் அரை மணி நேரத்தில் இதை செய்வார் – இந்திய முன்னாள் வீரர்
எனவே இந்த இடத்திற்கு சிறப்பாக பந்து வீசி பேட்டிங்கில் 20 ரன்கள் எடுக்கக்கூடிய திறமை இருக்கும் ஆகாஷ் தீப் விளையாடி இருக்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஒன்பதாவது இடத்தில் குல்தீப் யாதவ் ஓரளவுக்கு பேட்டிங் செய்யக் கூடியவர். எனவே இதை வைத்து சுலபமாக நிதீஷ் குமார் இடத்தை நிரப்பி விடலாம். இப்படி இருக்கும் பொழுது கம்பீர் தொடர்ந்து அணியை தேர்வு செய்வதில் தவறு செய்து வருகிறார். தற்பொழுது தென் ஆப்பிரிக்கா முதல் செசன் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 82 ரன் எடுத்திருக்கிறது.






