சச்சின் சாதனைக்கு முன்பாக.. டிராவிட் வரலாற்று சாதனையை முறியடிக்க போகும் ஜோ ரூட்.. முதல் இங்கிலாந்து வீரராக சாதனை

0
33

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்த போட்டியில் மிக அற்புதமாக செயல்பட்ட ஜோ ரூட்டுக்கு இந்தியாவின் ராகுல் டிராவிட் சாதனையை முறியடிக்க ஒரு பொன்னான வாய்ப்பு அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி 427 ரன்கள் குவித்தது. இந்த இன்னிங்ஸில் ஜோ ரூட் 143 ரன்கள் குவித்தார். இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் களம் இறங்கி 197 ரன்கள் குவித்தது.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் களம் இறங்கி இங்கிலாந்து 251 ரன்கள் குவித்தது. இந்த இன்னிங்ஸிலும் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 103 ரன்களை குவித்திருக்கிறார். பின்னர் 483 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. இந்த நிலையில் ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் சரியாக கஸ் அட்கின்சன் பந்து வீச்சில் நிஷான் மதுஸ்கா 13 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த போது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது ரூட்டின் 199 வது கேட்ச் ஆக அமைந்தது.

- Advertisement -

அதன் பிறகு ஆட்டத்தின் 14-வது ஓவரில் நிஷாங்கா 14 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த போது ஒல்லி ஸ்டோனின் பந்துவீச்சில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது ஜோ ரூட்டின் 200வது டெஸ்ட் கேட்ச் ஆக அமைந்தது. இதன் மூலம் 200 கேட்சுக்களை எட்டிய இங்கிலாந்து அணியின் முதல் ஃபீல்டர் என்ற வரலாற்று சாதனையை ரூட் நிகழ்த்தினார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 கேட்சுகள் பிடித்த நான்காவது வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார். விக்கெட் கீப்பர் அல்லாத பீல்டர்களில் அதிக கேட்ச் பிடித்தவராக இந்தியாவின் ராகுல் டிராவிட் 210 கேட்சுகள் பிடித்தவராக முதலிடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து இலங்கை அணியின் மகேலா ஜெயவர்த்தனே 205 கேட்ச்களோடு இரண்டாவது இடத்திலும் ஜாக் காலிஸ் 200 கேட்சுகளோடு மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.

இதையும் படிங்க:4 மெய்டன் ஓவர்.. டி20ல் இந்திய வம்சாவளி வீரர் உலக சாதனை.. 1.4 ஓவரில் மேட்சை முடித்து மெகா ரெக்கார்டு

தற்போது இந்தப் பட்டியலில் ஜோ ரூட் நான்காவதாக இணைந்திருக்கிறார். இன்னும் 11 கேட்சுகளை அவர் எடுக்கும் நிலையில் ராகுல் ட்ராவிட்டின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக ரன்களில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதற்கு முன்பாக கேட்ச்சுகளில் டிராவிட் சாதனையை முறியடித்து வருவார் என்று தெரிகிறது

- Advertisement -