இந்திய இளம் வீரர் வைபவ் சூரியவன்சி மிக அதிக சக்தியுடன் பந்தை அடிப்பார் எனவும், பயிற்சியில் கூட பந்துவீச்சாளர்கள் அவரைப் பார்த்து பயப்படுவதாகவும் ஜிதேஷ் சர்மா கூறியிருக்கிறார்.
கடந்த வருடத்தில் வளர்ந்து வரும் ஆசிய வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் இந்திய ஏ அணிகள் ஜிதேஷ் சர்மா தலைமையில் வைபவ் சூரியவன்சி விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவன் அழகான பையன்
இந்த நிலையில் ஜித்தேஷ் சர்மா ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வைபவ் சூரியவன்
சி உடனான அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். இந்த இளம் வயதில் அவர் பந்தை எவ்வளவு சக்தியுடன் அடிக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் பொழுது “வைபவ் சூரியவன்சி மிகவும் அழகான பையன். அவன் நாக்பூர் தலேகானில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அகாடமிவில் பயிற்சி செய்ய வருவது வழக்கம். அங்கு தான் அவனை எனக்குத் தெரியும். பிறகு என்னுடைய கேப்டன்ஷியில் கத்தாரில் ஆசியக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு வந்தார்”
சின்ன ஹல்க் மாதிரி
“எனக்கு தெரிந்து அவர் பந்தை மிக வலுவாக அடிபார் என்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியில் அவருக்கு பந்தை மேலே கொடுப்பதில்லை. அப்படி மேலே கொடுத்து அவர் அடித்தால் பந்து வீச்சாளர் தாக்கப்பட்டு விடுவார். இதன் காரணமாக அவருக்கு பந்தை ஷாட் ஆக வீசுகிறார்கள். அவர் சின்ன ஹல்க் மாதிரி”
இதையும் படிங்க : கோயங்காவுக்கு ரிஷப் பண்ட் அதை நிரூபிக்க தேவையில்ல.. தம்பி நீ இதை மட்டும் செய் கலக்கலாம் – ஸ்ரீகாந்த் அறிவுரை
“இந்தப் பையன் அப்படியான பயத்தை உருவாக்கி விட்டான். இவன் பேட் சுழற்றும் வேகம் நிக்கோலஸ் பூரன் மாதிரியானது. அவன் உங்களை அடித்து விடுவான் என்கின்ற பயம் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






