ஐபிஎல் 2025

33 பந்து 85 ரன்.. என் வழிகாட்டி தினேஷ் கார்த்திக் சொன்னத செஞ்சன்.. கப் உறுதி – ஜிதேஷ் சர்மா பேட்டி

நேற்று லக்னோ அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் வெறும் 33 பந்தில் 85 ரன்கள் குவித்த ஜிதேஷ் சர்மா, தன்னுடைய அதிரடி பேட்டிங்க்கு காரணம் என்னவென்று பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் வென்றால் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து இறுதி போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் விளையாட முடியும் என்கின்ற சூழ்நிலையில் ஆர்சிபி அணி களம் இறங்கியது. ஆனால் ரிஷப் பண்ட் அதிரடி சதம் அடிக்க லக்னோ அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது.

தினேஷ் கார்த்திக் சொன்னதை செய்தேன்

இந்த நிலையில் 12 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்து விராட் கோலி நான்காவது விக்கட்டாக வெளியேறினார். இந்த நிலையில் களம் இறங்கிய ஜிதேஷ் சர்மா யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அதிரடியாக விளையாடி 33 பந்தில் 85 ரன்கள் ஆட்டம் இழக்காமல் குவித்து அணியை வெற்றி பெற வைத்து, முதல் தகுதி சுற்றில் விளையாடுவதை உறுதி செய்தார்.

இதுகுறித்து ஜிதேஷ் சர்மா பேசும்பொழுது “என்னுடைய எண்ணங்கள் குறித்து சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். நிகழ்காலத்தில் இருப்பதைப் பற்றி மட்டுமே யோசித்து கொண்டு இருந்தேன். விராட் ஆட்டம் இழந்ததும் ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் செல்ல முடிவு செய்தேன். என்னுடைய மெண்டர் தினேஷ் கார்த்திக் சொல்வது இதுதான், எந்த சூழ்நிலையிலும் எனக்கு இருக்கும் திறமையால் ஆட்டத்தை முடிக்க முடியும் என்று சொல்வார்”

- Advertisement -

நான் அழுத்தத்தை ரசிப்பவன்

“இது ஒரு மிகப்பெரிய அணி. நான் அழுத்தத்தை ரசிக்கிறேன். இந்த அணியில் உள்ள பெரிய வீரர்களை பார்க்கும்பொழுது உற்சாகமாக இருக்கிறது. இந்த தருணத்தை நாங்கள் ரசிக்கின்றோம். இந்த ஆட்டத்தில் கிடைத்த வேகத்தை நாங்கள் அடுத்த போட்டிக்கு எடுத்துச் செல்வோம். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக எனது கேப்டன் ரஜத்துக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்”

இதையும் படிங்க : 228 ரன்.. 15 வருடங்கள்.. ஜிதேஸ் சர்மா காட்டடி.. ஆர்சிபி சாதனை மெகா வெற்றி.. பண்ட்டுக்கு வினோத சோகம்.. முழு முடிவுகள்

“ப்ளே ஆப் போட்டிக்கு ஹேசில்வுட் வந்து விடுவார். மேலும் எங்கள் அணியின் நம்பிக்கை அமைப்பு மிகவும் வலிமையாக இருக்கிறது. எங்கள் அணியில் எந்த வீரரை பார்த்தாலும் எல்லோரும் மேட்ச் வின்னர்கள். நாங்கள் மூன்று நான்கு விக்கெட்டுகளை இழந்த பொழுதும் எங்களுக்கு வெல்ல முடியும் என்கின்ற நம்பிக்கை இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts