15 ஃபோர் 6 சிக்ஸர்.. தமிழ்நாடு அணியை வச்சு செய்த இஷான் கிஷான்.. அகர்கருக்கு ஸ்ட்ராங் மெசேஜ்

0
87
Ishan

நேற்று தொடங்கிய இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடர் ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 419 ரன்கள் குவித்து இருக்கிறது.

இந்த ஆண்டிற்கான ரஞ்சி டிராபி சீசனில் போட்டிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் ஒரு போட்டியில் தமிழ்நாடு ஜார்கண்ட் அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜார்க்கண்ட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

இஷான் கிஷான் அதிரடி

முதலில் பேட்டிங் செய்ய வந்த ஜார்கண்ட் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் மோகன் 10, சரண்தீப் சிங் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அடுத்து வந்த குமார் சுராஜ் 3, விராட் சிங் 28, குமார் குஷ்கரா 11, அனுக்குல் ராய் 12 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேற அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒருமுனையில் மிகச் சிறப்பாக விளையாடிய கேப்டன் இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி சதம் அடித்து 247 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 173 ரன்கள் குவித்தார். இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த சகில் ராஜ் 183 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். இறுதியாக ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 132.1 ஓவரில் 419 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தமிழ்நாடு தரப்பில் குர்ஜப்னித் சிங் 4 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

அகர்கருக்கு ஸ்டராங் மெசேஜ்

கடந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, தனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காமல் தொடர்ந்து இந்திய அணியில் இருந்து வருவதால், மனவெறுமை ஏற்பட்டு விட்டதாக இஷான் கிஷான் இந்திய அணியை விட்டு வெளியேறினார். பிறகு அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இதையும் படிங்க : ஆஸி முதல் ODI.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. ஜெய்ஸ்வால் ஆடுவாரா?.. உலகக் கோப்பைக்கு ஒத்திகை.. முழு அலசல்

இதைத்தொடர்ந்து இரண்டாவது விக்கெட் கீப்பராக துருவ் ஜுரல் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தற்போது காயத்தால் ரிஷப் பண்ட் விளையாடாத நிலையில் கூட தமிழகத்தின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் நாராயணன் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அகர்கர் இஷான் கிஷானை தேர்வு செய்யவில்லை. இந்த நிலையில் அவர் தமிழ்நாட்டிற்கு எதிராக பெரிய சதம் அடித்து தேர்வுக் குழுவுக்கு பெரிய மெசேஜை அனுப்பி இருக்கிறார்.

- Advertisement -