ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.
தற்போது இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட வெள்ளை பந்து தொடர்களில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அக்டோபர் 19, 23 மற்றும் 25ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.
வலிமையான பேட்டிங் யூனிட்
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஒருநாள் தொடர் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் கேப்டன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல்.ராகுல் என முதல் ஐந்து இடங்கள் மிகவும் வலிமையாக இருக்கிறது.
இதற்கு அடுத்த ஆறு இடங்களில் ஆல்ரவுண்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் யார் இடம் பெறுவார்கள் என்பதுதான் சுவாரசியமான விஷயமாக மாறுகிறது. இதே அணியில் ஜெய்ஸ்வாலும் இடம் பெற்று இருக்கிறார். ஆனால் ஆட்டக்காரர்கள் காயமடைந்தாலோ அல்லது ரோகித் சர்மா சரியாக விளையாட விட்டாலோ வாய்ப்பு கிடைக்கலாம்.
ஆல்ரவுண்டர்கள் யார்?
இப்போதைக்கு ஹர்திக் பாண்டியா இடம் பெறாததால் நிதீஷ் குமார் ரெட்டி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் இருக்கும் நிலையில் அக்சர் படேக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஹர்ஷித் ராணாவை எட்டாவது இடத்தில் விளையாட வைப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு அடுத்த மூன்று இடங்களில் குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் இடம் பெறுவார்கள்.
இந்திய ஒருநாள் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கேஎல் ராகுல் (விகீ), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரல் மற்றும் ஜெய்ஸ்வால்.
இதையும் படிங்க : லண்டன்ல விராட் கோலி என்ன செஞ்சாருனு உங்களுக்கு தெரியல.. மனுஷன் அதுக்காக வெறியா இருக்காரு – தினேஷ் கார்த்திக் தகவல்
இந்திய பிளேயிங் XI: சுப்மன் கில், ரோகித் சர்மா விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், நிதீஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங்.






