SMAT பைனல்.. ஜார்கண்ட் டி20 உலக சாதனை.. இஷான் கிஷான் அதிரடி சதம்.. ஹரியானா பரிதாபம்

0
629

இன்று சையத் முஸ்டாக் அலி இறுதிப்போட்டியில் ஹரியானாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட் அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் சாதனை ஸ்கோரை பதிவு செய்திருக்கிறது.

இந்திய உள்நாட்டு மிகப்பெரிய டி20 தொடராக சையத் முஸ்டாக் அலி தொடர் சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு ஜார்கண்ட் மற்றும் ஹரியானா அணிகள் தகுதி பெற்றன. மேலும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹரியானா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

மிரட்டிய விக்கெட் கீப்பர்கள்

முதலில் பேட்டிங் செய்ய வந்த ஜார்கண்ட் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் விராட் சிங் 2 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷான் மற்றும் துணை கேப்டன் குமார் குஷ்கரா இருவரும் இணைந்து பயமில்லாமல் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார்கள். இவர்கள் இருவரும் விக்கெட் கீப்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் 45 பந்தில் சதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 82 பந்துகளில் 177 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சதம் அடித்த இஷான் கிஷான் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து விளையாடிய குமார் குஷ்கரா 38 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 81 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ஜார்க்கண்ட் உலகச் சாதனை

இதைத்தொடர்ந்து அனுக்குல் ராய் 20 பந்துகளில் 40 ரன்கள், ராபின் மின்ஸ் 14 பந்தில் 31 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார்கள். ஜார்கண்ட் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்து இருக்கிறது. இது விஜய் ஹசாரே இறுதிப்போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2026.. சன்ரைசர்ஸ் அணி 300 ரன்கள் அடித்தால், 300 ரன்கள் விட்டு கொடுப்போம்.. ஆகாஷ் சோப்ரா கருத்து

மேலும் உலகெங்கும் நடக்கும் டி20 தொடர்களில் இதுவரையில் இறுதி போட்டியில் அடிக்கப்பட்ட மிகப்பெரிய ஸ்கோர் ஆக இது பதிவாகி இருக்கிறது. இந்த வகையில் ஜார்கண்ட் உலக சாதனை படைத்து அசத்தியிருக்கிறது.

- Advertisement -