இந்திய பெண்கள் அணியின் எதிர்காலங்களே வென்று வாருங்கள்; அண்டர் 19 பெண்கள் அணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாழ்த்து சொன்ன ஜெய் ஷா!

0
98

டி20 உலகக்கோப்பை பைனலில் விளையாடவுள்ள அண்டர் 19 பெண்கள் அணிக்கு வீடியோ கான்பரன்ஸில் வாழ்த்தியுள்ளார் ஜெய் ஷா.

முதல்முறையாக பெண்களுக்கான அண்டர் 19 டி20 உலகக்கோப்பை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரானது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுக்குள், கால் இறுதி, அரை இறுதி என அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிப் போட்டியை எட்டியுள்ளது.

- Advertisement -

இந்த உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு பெண்கள் அணிகள் மோதவிருக்கின்றன. ஜனவரி 29ஆம் தேதி மாலை 5.15 மணியளவில் இந்த இறுதிப் போட்டியானது ஒளிபரப்பப்பட இருக்கிறது.

அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சவாலி வர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதேபோல் மற்றொரு அரை இறுதிப் போட்டியில் பலம் மிக்க ஆஸ்திரேலியா பெண்கள் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் இங்கிலாந்து அணி நுழைந்திருக்கிறது.

முதல்முறையாக அண்டர் 19 பெண்கள் உலகக்கோப்பை நடத்தப்பட்டு வருவதால், இதனை வென்று புதிய வரலாறு படைப்பதற்கு பலரும் வாழ்த்துக்களை இந்திய பெண்கள் அணிக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிசிசிஐ தலைமைச் செயலாளர் ஜெய் ஷா வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஜனவரி 28ஆம் தேதி அண்டர் 19 பெண்கள் அணிக்கு பிசிசிஐ சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

கலக்கிவரும் பெண் வீராங்கனைகள்

இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஸ்வேதா செராவத் ஆறு போட்டிகளில் மூன்று அரைசதங்கள் உட்பட 296 ரன்கள் அடித்து பேட்டிங்கில் நம்பிக்கையை கொடுத்திருக்கிறார். கேப்டன் சவாலி வர்மா ஆறு போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 157 ரன்கள் அடித்திருக்கிறார். பந்துவீச்சில் பார்ஷவி சோப்ரா மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

முதல்முறையாக இந்த டி20 உலகக்கோப்பை அண்டர் 19 பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதனை வென்று புதிய சாதனை படைக்க வேண்டும் என்று அண்டர் 19 பெண்கள் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. சர்வதேச கிரிக்கெட்டில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு பல முன்னேற்பாடுகள் நடந்துவருகிறது. அதில் ஒரு உதாரணமாக பெண்கள் ஐபிஎல் தொடர் நடத்தப்பட உள்ளது. இது எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.